• Apr 16 2026

அப்போ அதே கேசரி தானா.? "ஜனநாயகன்" படம் குறித்து வெளிவந்த சூப்பரான அப்டேட்.!

shali / 3 months ago

Advertisement

Listen News!

முன்னணி நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘ஜனநாயகன்’ தற்போது ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கி வருகிறது. காரணம், இதுவே விஜயின் கடைசி படம் என்பதாகும்.

ஜனநாயகன் திரைப்படம் இந்த வருடம் பொங்கலை முன்னிட்டு, ஜனவரி 9ம் தேதி உலகமெங்கும் வெளியாக உள்ளது. இது விஜய் ரசிகர்களுக்கு, திரையரங்கில் அவரை இறுதியாக காணும் அரிதான வாய்ப்பு என்பதால், சமூக வலைத்தளங்கள் முழுவதும் இது பற்றிய கருத்து பரவி வருகின்றது. 


சமீபத்தில் வெளியாகியுள்ள செய்திகள் மூலம், ஜனநாயகன் படம் தெலுங்கில் பாலையா நடித்து ஹிட் அடித்த ‘பகவந்த் கேசரி’ படத்தின் தமிழ் ரீமேக் என்று கூறப்படுகிறது. ஆனால் படக்குழு இதுவரை இதுபற்றி எந்த அதிகாரபூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.

அத்துடன், சமீபத்தில் வெளியான டிரெய்லரில் படத்தின் காட்சிகளை பார்த்தபோது, பகவந்த் கேசரி படத்தில் இடம்பெற்ற பல முக்கிய காட்சிகள் ஜனநாயகன் திரைப்படத்திலும் அதேபோல் இடம்பெற்றுள்ளது தெரிகிறது. 

அதே நேரம், விஜய் சமீபத்தில் அரசியலில் நுழைந்ததால், அரசியல் தொடர்பான சில காட்சிகள் இப்படத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. இந்நிலையில், சமீபத்தில் வெளிவந்த தகவலின்படி, பகவந்த் கேசரி படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை 4 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியவர் KVN புரடெக்‌ஷன் என கூறப்படுகிறது. இத்தகவல் தற்பொழுது வைரலாகி வருகின்றது.  

Advertisement

Advertisement