• Feb 03 2026

ஏ.வி.எம். நிறுவனம் கற்றுக் கொடுத்த பாடங்கள்.. என்றுமே மறவாது.! படத்திறப்பு விழாவில் கமல்

subiththira / 4 weeks ago

Advertisement

Listen News!

சென்னையில் இன்று தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர் ஏ.வி.எம். சரவணன் படத்திறப்பு விழா இடம்பெற்றது. திரையுலக பிரபலங்கள், தயாரிப்பு குழுவினர், மற்றும் கலைஞர்கள் பெருமளவில் கலந்து கொண்ட இந்த விழா, தமிழ் சினிமாவில் ஒரு முக்கியமான தருணமாக காணப்பட்டது.


விழாவில் பேசும் பொழுது, நடிகர் கமல் ஹாசன் தனது சினிமா பயணத்தின் தொடக்க காலங்களைப் பற்றியும், ஏ.வி.எம் ஸ்டூடியோ பற்றியும் திறந்த மனதுடன் பகிர்ந்தார்.

கமல் ஹாசன் தனது உரையில், "சிறுவயதிலேயே, நான் ஏ.வி.எம் ஸ்டூடியோவிற்குச் சென்று சினிமாவைக் கற்றுக் கொண்டேன். அந்த அனுபவங்கள் எனக்கு ஒரு புதிய உலகத்தை திறந்தது. நான் இன்று செய்யும் ஒவ்வொரு படமும், என் கேரியரில் கிடைக்கும் அனுபவங்கள், அந்த காலத்து படிப்புகளின் மூலம் தான் உருவாகியவை." என்றார். 

அவர் மேலும், "சினிமாத் துறையில் ஏ.வி.எம் சரவணன் எனக்கு நிறைய விஷயங்களை கற்றுக் கொடுத்திருக்கிறார். அவருடைய வழிகாட்டலால் நான் கலைஞனாகவும், மனிதனாகவும் வளர்ந்தேன். ஏ.வி.எம் குடும்பத்துடன் ஒட்டிக் கொள்வதில் எனக்கு பெருமை. அந்த உரிமையை அவர்கள் எனக்கு கொடுத்ததற்காக நான் நன்றி சொல்ல கடமைப்பட்டு இருக்கிறேன்." என்றும் தெரிவித்திருந்தார். 

Advertisement

Advertisement