• Jan 08 2026

'லொள்ளு சபா' பிரபல நடிகர் வெங்கட்ராஜ் காலமானார்.!

Aathira / 3 days ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான லொள்ளு சபா  நிகழ்ச்சியின் மூலம் பலரையும் சிரிக்க வைத்தவர் தான் நடிகர் வெங்கட்ராஜ்.  இந்த நிகழ்ச்சி இன்றும் பலரது ஃபேவரைட் ஆக காணப்படுகிறது. 

விஜய் டிவியில் ஒளிபரப்பான லொள்ளு சபா நிகழ்ச்சி யின் மூலம் பிரபலமானவர்களுள் சந்தானம், யோகி பாபு,  வெங்கட்ராஜ் போன்ற  நடிகர்களை குறிப்பிடலாம். 

அந்த வகையில் தனது எதார்த்தமான நடிப்பால் மக்களை கவர்ந்தவர் தான் நடிகர் வெங்கட்ராஜ். இவருடைய உடல் மொழி  மற்றும் டைமிங் நகைச்சுவை மூலம் ரசிகர்களை சிரிக்க வைத்தார். 

இவருடைய காமெடிகள் இன்றும் இணையத்தில் வைரலாகி வருகின்றன. பலர் மீம்ஸ் கிரியேட்டராக  பகிர்ந்து வருகின்றனர். சின்னத்திரை மட்டுமின்றி சினிமாவிலும் பல கேரக்டரில் நடித்துள்ளார்.  மனிதன் திரைப்படத்திலும் போலீஸ் கான்ஸ்டேபிள் ஆக நடித்திருந்தார். 


மேலும்  சைத்தான், மெட்ரோ, டிக்கிலோனா போன்ற படங்களிலும்  நடித்திருந்தார். இவர் நகைச்சுவை நடிகராக மட்டுமில்லாமல்  தனக்கேற்ற கேரக்டர்களை தேர்ந்தெடுத்து அதை உணர்வுபூர்வமாக நடிக்க கூடிய ஆற்றல் கொண்டவராகவும் காணப்படுகின்றார். 

இந்த நிலையில்,  நடிகர் வெங்கட்ராஜ் தனது 70 வயதில் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்து உள்ளார். தற்போது அவருடைய மறைவு தமிழ் சினிமா திரையுலகினர் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.  தற்போது பலரும் தங்களுடைய இரங்களை சமூக வலைத்தளங்கள் ஊடாக தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement