விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி இன்னும் ஒரு சில, நாட்களில் நிறைவடைய உள்ளது. ஆனால் அதற்கு இடையில் அட்டூழியம் அலறல், அவமானம், சர்ச்சை, அழுகை என ஒரே கலவர மேடையாக மாறிவிட்டது பிக் பாஸ் சீசன் 9. இந்த சீசன் ஆரம்பித்ததில் இருந்து தற்போது வரையில் பார்வையாளர்களை சலிப்படையச் செய்துள்ளது.
இறுதியாக இடம்பெற்ற கார் டாஸ்கின் போது சாண்ட்ராவை வலுக்கட்டாயமாக பிடித்து பார்வதியும் கமரூதினும் தள்ளிய விவகாரம் பெரும் பஞ்சாயத்து ஆக வெடித்தது. அதன் பின்பு விஜய் சேதுபதி எந்த ஒரு மன்னிப்பும் கொடுக்காமல் இருவருக்கும் ரெட் கார்ட் கொடுத்து வெளியே அனுப்பினார்.
இதுவரையில் விஜய் சேதுபதி பலமுறை எச்சரித்த போதும் அவற்றை கண்டு கொள்ளாத பார்வதியும் கமரூதினும் ரெட் கார்ட் காட்டப்பட்ட அந்த நொடியில் அதிர்ச்சி அடைந்து, முகத்தில் காணப்பட்ட பயம், கண்களில் பதட்டம், தடுமாறிய நிலை என அத்தனையும் ரசிகர்களால் பெரிதும் கவனிக்கப்பட்டன.
கமருதீன் போகும்போது திவ்யா அவரை ஒரு நிமிடம் நிறுத்தி கொடுத்த அட்வைஸ் ரசிகர்களின் குரலாகவே காணப்படுகிறது. அதன்படி அவர் கூறுகையில், நான் ஏற்கனவே உன்கிட்ட சொன்ன.. இவ கூட சேர்ந்து திரியதால உன் வாழ்க்கையே அழிய போகுதுன்னு.. இத்தனை நாளா கனவு கண்ட வாழ்க்கை எல்லாம் முடிஞ்சு போச்சு.. நீ எவ்வளவு பெரிய தப்பு பண்ணி இருக்கேனு உனக்கு புரியுதா? இல்லையா? என பேசியிருந்தார்.
இதைத்தொடர்ந்து இருவரும் வீட்டை விட்டு வெளியேற முன்பு சாண்ட்ராவிடம் மன்னிப்பு கேட்டனர். மேலும் கமருதீனும் சாண்ட்ராவின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு வெளியேறினார்.
இந்த நிலையில், கமருதீன் வீட்டை விட்டு வெளியேறும் போது அவரை ஒரு நிமிடம் தடுத்து பேசிய திவ்யா அவரிடம், நீ வெளியே போகும் போது யார் கூட வேணும் என்றாலும் சவகாசம் வச்சுக்கோங்க.. ஆனா இப்ப வெளியில் போய் இதை இதோட கட் பண்ணி விட்டுடுங்க என்று பார்வதியை குறிப்பிட்டு சொல்லுகிறார்.
இதுதான் உங்கள் லைஃப்க்கு ரொம்ப நல்லது. நான் எவ்வளவு டைம் சொன்னேன் என்று திவ்யா சொல்ல, நானும் மூன்றாவது வாரத்தில் இருந்தே சொல்லிக் கொண்டிருக்கின்றேன் என்று கானா வினோத்தும் கவலைப்படுகின்றார்.
இறுதியாக சபரியை கட்டியணைத்து வினோத்தின் கன்னத்தில் முத்தம் கொடுத்துவிட்டு வெளியேறி சென்றார் கமருதீன்.
Listen News!