விஜய் டிவி பிரபலமான பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒன்பதாவது சீசன் தற்போது அதிகம் கவனம் பெற்றுள்ள நிலையில், நிகழ்ச்சியில் சமீபத்தில் ஏற்பட்ட கார்டு விவகாரம் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நிகழ்ச்சியில் சாண்ட்ராவை எட்டிய சம்பவத்திற்கு பதிலாக, விஜே பார்வதி மற்றும் கம்ருதீனுக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றிய நிலையில், இதனை பார்த்த பிக்பாஸ் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
இந்த சம்பவம் நிகழ்ந்ததும், ரசிகர்கள் மற்றும் சமூக வலைத்தளங்கள் பரபரப்பாகக் கருத்துகள் பகிர்ந்து வருகின்றன. அதே சமயத்தில், பிரபல பின்னணி பாடகி சுசித்ரா இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்டு, நிகழ்ச்சியில் நடக்கும் நெருக்கடியான சூழலை பற்றி விளக்கியுள்ளார்.

வீடியோவில் சுசித்ரா கூறியதாவது, ". பார்வதி ஒரு சுயநலவாதி. அவர்களது தாக்கம் எப்போதும் அதிகமாக இருக்கும் என்பதற்கு காரணம், அவர்கள் மற்றவர்களுக்கு அருகில் இருந்தால் மட்டுமே. அவர்கள் ஒரு காந்தம் மாதிரி இருக்கிறார். மற்றவர்கள் எல்லாம் இரும்பு துண்டு மாதிரி. கொஞ்சம் தூரமாக இருந்தால் அவர்களது தாக்கம் மற்றவர்களுக்கு தெரியாது. அவர்களை நெருங்கிவிட்டால் நாமும் அவர்கள் மாதிரி மாறிக் கொண்டு விட வேண்டியது தான்.
வெளியே இருந்து யாராவது பிய்த்தால் தான் அவர்களது தாக்கத்தை தவிர்க்க முடியும்.இவர்களை சமாளிக்க முடியாது. சமாளிக்காமல் இருப்பதே ஒரே வழி. அவர்களிடம் க்ளோஸ் ஆகக்கூடாது. அவர்களிடம் நெருக்கமாவதற்கே சிலர் விதிக்கப்பட்டிருக்கிறார்கள். இப்போது பார்வதிக்கு கம்ருதீன் விதிக்கப்பட்டது மாதிரி. கம்ருதீனை யாராலும் காப்பாற்ற முடியாது." என்று கூறியுள்ளார்.
சுசித்ராவின் இந்த கருத்துகள் சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக பகிரப்பட்டு, பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியுள்ளன. சிலர் அவரது வார்த்தைகளை மிகவும் உணர்ச்சிகரமாகவும், நேர்மையாகவும் கருதுகின்றனர்.
Listen News!