விஜய் டிவி சீரியல்களில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தற்பொழுது பரபரப்பான திருப்பத்துடன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில், தற்பொழுது வெளியான ப்ரோமோ அனைத்து மக்களையும் கவருகின்ற விதத்தில் அமைந்துள்ளது.
அதில், பாக்கியம் கோர்ட்டுக்குப் போய் என்ட பொண்ண கஷ்டப்பட்டு கல்யாணம் பண்ணி வைச்சேன். ஆனா, இந்தக் குடும்பத்தில இருக்கிற எல்லாரும் என்ர பொண்ண ரொம்ப கொடுமைப்படுத்துறாங்க என்கிறார். பின், பாண்டியன் ஜட்ஜ் கிட்ட நாங்க அந்தப் பொண்ணுக்கு எந்தத் துரோகமும் பண்ணல என்கிறார்.

அதனைத் தொடர்ந்து முத்துவேல், வீட்டுக்கு வந்த பொண்ணை கொடுமைப்படுத்துற அளவுக்கு என்ர தங்கச்சி குடும்பம் மோசமானவங்க இல்ல என்கிறார். பின் சக்திவேலும் அப்புடி எதுவும் நடக்கல என்று சொல்லுறார். இதனை அடுத்து முத்துவேல் மற்றும் சக்திவேலின் சாட்சியால் பாண்டியன் குடும்பத்தை சிறையிலிருந்து வெளியேற்றுகிறார்கள்.
பின் பாண்டியன் முத்துவேலின் கையைப் பிடித்து நன்றி சொல்லுறார். மறுபக்கம் கோமதி இக்கட்டான சூழலில என்ர குடும்பத்தைக் காப்பாத்திவிட்டதே போதும் என்கிறார். இதுதான் இனி நிகழவிருப்பது....
Listen News!