• Jan 07 2026

30 வயசு வரைக்கும் கல்யாணம் வேண்டாம்… Living Together ஓகே.! – வனிதா விளக்கம்

subiththira / 3 days ago

Advertisement

Listen News!

நடிகை வனிதா விஜயகுமார் எப்போதும் தனது நேர்மையான கருத்துகளாலும், விவாதமான பேச்சுகளாலும்  கவனம் ஈர்த்து வருபவர். சமீபத்தில் அவர் அளித்த ஒரு பேட்டி தற்போது சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. குறிப்பாக திருமணம், உறவு மற்றும் லிவிங் டுகெதர் குறித்து அவர் வெளிப்படுத்திய கருத்துகள் பல்வேறு விவாதங்களை எழுப்பியுள்ளது.


அந்த பேட்டியில் பேசிய வனிதா,“எனக்கு கல்யாணத்துக்கு மேல நம்பிக்கை இல்ல. ரெண்டு மனசு கல்யாணம் பண்ணுறது தான் உண்மையான கல்யாணம். ஆனா, என் பொண்ணுக்கு ஒரு நாள் கல்யாணம் நடக்கும். ஆனா, அவங்களுக்கே நான் சொல்லுறது நீங்க Living Together பண்ணுங்க. Relationship-ல இருங்க....

ஆனா, 30 வயசு வரைக்கும் கல்யாணம் வேணாம். உங்களுக்கு இவங்க கூட தான் வாழப்போறோம்னா மட்டும் கல்யாணம் பண்ணுங்க. கட்டாயத்துக்காக கல்யாணம் பண்ண கூடாதுன்னு சொல்லுவேன்." என்று கூறியுள்ளார். 


வனிதா விஜயகுமாரின் இந்த பேட்டி வெளியாகியதும், சமூக வலைத்தளங்களில் கலவையான எதிர்வினைகள் வெளிப்பட்டுள்ளன. ஒரு தரப்பு, “வனிதா சொல்றது இன்றைய காலத்துக்கு ஏத்த மாதிரி இருக்கு” என ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

மற்றொரு தரப்பு, “இந்த மாதிரி கருத்துகள் இளம் தலைமுறையை குழப்பும்” என்று விமர்சனங்களையும் முன்வைத்து வருகின்றனர்.


Advertisement

Advertisement