• Jan 19 2025

விஜய் ஆன்டனியை தொடர்ந்து ராப் பாடகர் வாகீசனுக்கு கிடைத்த வாய்ப்பு! இயக்குனர் அமீர் அதிரடி

Aathira / 4 months ago

Advertisement

Listen News!

இலங்கையைச் சேர்ந்த ராப் பாடகரான வாகீசன் ராசையா தற்போது ஒட்டுமொத்த தமிழ்நாட்டையுமே கலக்கிக் கொண்டுள்ளார். தனது இயல்பான செந்தமிழ் மொழியில் நடையினால் ரசிகர்களை மட்டும் இல்லாமல் சினிமா பிரபலங்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

சமீபத்தில் இவர்கள் சிறிய ரூம் ஒன்றில் இருந்து பாடிய ராப் பாடல் இணையத்தில் மிகப்பெரிய வைரலாகி கிட்டத்தட்ட ஒரு கோடிக்கும் அதிகமான பார்வையாளர்களை சேர்ந்திருந்தது. உலகத் தமிழர்களும் இவருடைய நாவுக்கு அடிமையாகி விட்டார்கள்.

தமிழ்நாட்டில் இவர்கள் செய்த இசை கச்சேரியையும் மிகப்பெரிய அளவில் வைரலானது. அவருடைய ராப் பாடலை கேட்பதற்காக பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் கூடியிருந்தார்கள். மேலும் இவர்கள் தற்போது பிரபல சேனல்களுக்கு அளித்து வரும் பேட்டிகளும் வைரலாகி வருகின்றன.

இதை தொடர்ந்து சமீபத்தில் விஜய் ஆண்டனியை நேரில் சந்தித்து புகைப்படத்தையும் பகிர்ந்து இருந்தார் வாகீசன். மேலும் விஜய் ஆண்டனி தனக்கு பாடுவதற்கான வாய்ப்பு ஒன்றை தந்துள்ளதாகவும், அது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.


இந்த நிலையில், தற்போது இலங்கையை சேர்ந்த பாடகர் ஆன வாகீசன் ராசையாவுக்கு மற்றுமொரு வாய்ப்பு கிடைத்துள்ளது.

அதாவது இவருடைய பாடல்களை பார்த்த இயக்குனர் அமீர் அவர்களை நேரில் அழைத்து பாராட்டியதோடு அவர் படத்தில் பாடுவதற்கான இரண்டு வாய்ப்புகளையும் கொடுத்துள்ளார். இதனை பாடகர் வாகீசன் பிரபல சேனல் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement