• Jan 18 2025

நீக்கப்பட்டது தடை... ஐகோட் உத்தரவு... குணா திரைப்படம் ரீ-ரிலீஸ்!

subiththira / 4 months ago

Advertisement

Listen News!

உலகநாயகன் கமல் நடிப்பில் 1991ல் வெளியான படம் 'குணா'. இந்த திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்து இருந்தார். கமலின் நடிப்பு, இளையராஜாவின் இசை, குணா குகை என படத்தில் பல விஷயங்கள் பேசப்பட்டாலும் அந்த சமயம் படம் வரவேற்பை பெறவில்லை. ஆனால் மஞ்சுமல் பாய்ஸ் திரைப்படம் வந்த பின்னர் குணா திரைப்படம் மேலும் பேசப்பட்டது.  


இப்போது வரை கமலின் நடிப்பை கூறும் படங்களில் இந்த குணா-விற்கு ஒரு இடம் உண்டு இந்த படத்தை ரீ-ரிலீஸ் செய்யும் வேலைகள் நடந்து வந்தன. இதனை பிரமீடு மற்றும் எவர்கிரின் மீடியா நிறுவனங்கள் மேற்கொண்டு வந்தன. ஆனால் படத்தின் பதிப்புரிமை தன்னிடம் இருப்பதாக கூறி குணா படத்தை ரீ-ரிலீஸ் செய்ய தடை விதிக்க கோரி கன்ஷியாம் ஹேம்தேவ் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.


இதை விசாரித்த நீதிமன்றம் ரீ-ரிலீஸ் செய்ய இடைக்கால தடை விதித்து, இதுபற்றி பிரமீடு மற்றும் எவர்கிரின் மீடியா நிறுவனங்கள் பதிலளிக்க உத்தரவிட்டிருந்து. இந்த வழக்கு இன்று(செப் 6) மீண்டும் விசாரணைக்கு வந்தபோது பிரமீடு மற்றும் எவர்கிரின் மீடியா நிறுவனங்கள் தரப்பில் ஆஜரான வக்கீல், குணா படத்தின் பதிப்புரிமை காலம் 5 ஆண்டுகள் மட்டுமே வழங்கப்பட்டிருந்தது. எனவே குணா படத்தின் வெளியிடும் உரிமையை கன்ஷியாம் ஹேம்தேவ் கோர முடியாது என கூறியதால். கூடியவிரைவில் குணா ரீ ரிலீஸ் செய்யப்படும்.

 


Advertisement

Advertisement