• Sep 16 2024

கப்பலில் நீலக்குயிலாக மாறிய ரம்யா பாண்டியன்! கிளாமர் போட்டோஸ் இதோ..

Aathira / 1 week ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் 2015 ஆம் ஆண்டு வெளியான டம்மி பட்டாசு என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர்தான் நடிகை ரம்யா பாண்டியன். இந்த படத்தில் இவருடைய கேரக்டர் மக்கள் மத்தியில் நல்ல ரீச் ஆகாததால் பெரும்பாலானோர் இவரை கவனிக்க மறுத்து விட்டார்கள்.

இதைத் தொடர்ந்து ஜோக்கர் படத்தில் ஹீரோயின் கேரக்டரில் நடித்து தனது முழு நடிப்பு திறனையும் வெளிக்காட்டி ரசிகர்களின் கவனத்தை பெற்றார். இந்த படத்தில் இவருடைய நடிப்பு பலரை ஈர்த்ததோடு பிரபலங்களும் அவரை பாராட்டினார்கள்.

இதைத்தொடர்ந்து ஆண் தேவதை, இராமே ஆண்டாலும் ராவண ஆண்டாளும் போன்ற படங்களில் நடித்துள்ளார். தமிழில் பட வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தினால் மலையாள பக்கம் திரும்பினார். அதில் மம்முட்டிக்கு ஜோடியாக நடித்து மலையாள சினிமாவிலும் என்ட்ரி கொடுத்தார்.


தற்போது போதிய பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தினால் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ரம்யா பாண்டியன் விதவிதமாக ஸ்டைலிஷ் உடையில் கிளாமர் போட்டோஷூட் நடத்தி போஸ்ட் செய்து ரசிகர்களை ஏங்க வைத்து வருகின்றார்.

இந்த நிலையில், தற்போது கடற்கரையில் நீல நிற உடையில் அவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை ரசிக்கும் வரையில் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றார்கள்.

Advertisement

Advertisement