தமிழ் சினிமாவில் விஜய் நடித்த 'புலி' படத்தை இயக்கிய இயக்குனர் சிம்பு தேவன் இயக்கத்தில் தற்போது ஜோகி பாபு நடித்த திரைப்படம் தான் போர்ட்.
இந்த படத்தில் யோகி பாபு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளதோடு அவருடன் கௌரி ஜி கிஷன், எம் எஸ் பாஸ்கர், சின்னி ஜெயந்த், சாம்ஸ், மதுமிதா, கொள்ள புலி லீலா, அக்ஷதா தாஸ், உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.
80 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவை ஆட்சி செய்த பிரிட்டிஷ் காலத்தில் ஜப்பான் மெட்ராஸ் மாகாணத்தில் மீது குண்டு விழ.. பலர் உயிர் பிழைப்பதற்காக முன் பின் அறியாத 10 பேர் ஒரே படகில் ஏறி ஒரு வங்காள விரிகுடாவின் பக்கம் ஒதுங்குகிறார்கள். அந்தப் படகு பாரம் தாங்காமல் கவிழ பார்க்கின்றது. அதே நேரத்தில் பசியோடு ஒரு சூரா அந்த படகை சுற்றுகின்றது. இதனால் படகு கவிழாமல் இருக்க யாராவது மூன்று பேர் அந்த படகிலிருந்து குதிக்க வேண்டும் இவ்வாறு படத்தின் டிரைலர் ஒன்று அண்மையில் வெளியானது.

இந்த நிலையில் தற்போது வெளியான டிரைலரில், காந்தி நேரு உள்ளிட்ட அனைவரையும் சிறையில் இருந்து விடுவிக்க கோரி கொடுக்கப்பட்ட மனு மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது என்று தொடங்கும் காட்சியில், பிரிட்டிஸ் அரசிடம் அடிமையாக காணப்படும் ஒரு கூட்டம் அதிலிருந்து தப்பிக்க படகில் ஏற முனைகின்றது. மறுபக்கம் குண்டு மழை பொழிகின்றது. படகில் ஏறிச் சென்றவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பது தான் படத்தின் முக்கிய கதை.
அத்துடன் இந்த திரைப்படம் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 2ம் திகதி வெளியாகவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Presenting our next association for the release of @iyogibabu & Director @chimbu_deven’s #Boat !!
A Survival Thriller releasing in theatres on Aug 2nd🛶
Produced by @maaliandmaanvi & @cde_off 
 
A @SakthiFilmFctry @sakthivelan_b release#முழுக்க_முழுக்க_கடலில் #BoatFromAug2nd… pic.twitter.com/5vN8UDVRh0
                             
                            
                            
                            
                                                    
                                                    
                                            
                                            
                                            
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                
                
                
                
                
Listen News!