• Jan 19 2025

மீண்டும் விலை மாதுவாக களமிறக்கும் அஞ்சலி..! பின்னணியில் இப்படியொரு கதையம்சமா?

Aathira / 6 months ago

Advertisement

Listen News!

'கற்றது தமிழ்' என்ற படத்தில் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை தான் அஞ்சலி. இவர் தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகையாக பிசியாக இருந்து வருகின்றார்.

இதை தொடர்ந்து அங்காடி தெரு, எங்கேயும் எப்போதும், நாடோடிகள் 2, வத்திக்குச்சி உள்ளிட்ட பல நட படங்களில் நடித்துள்ளார். தொடர்ந்தும் மலையாளம், கன்னடம், தெலுங்கு  உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகின்றார் அஞ்சலி.

அஞ்சலி நடிப்பில் சமீபத்தில் வெளியான தெலுங்கு படம் தான் 'கேங்க்ஸ் ஆப் கோதாவரி' இந்த படத்தில் அஞ்சலி விலைமாது கேரக்டரில் நடித்துள்ளார். அவரது நடிப்புக்கு ரசிகர்கள் மத்தியில் பாராட்டுக்கள் கிடைத்து வருகின்றன.

இந்த நிலையில், தற்போது மீண்டும் பஹிஷ்கரன் என்ற வெப் தொடரில் விலை மாதுவாக நடிக்க இருக்கின்றார். இந்த தொடர் அஞ்சலி கிராமத்தில் நடக்கும் பழிவாங்கும் கதை அம்சம் கொண்ட காணப்படுகின்றது. இதை முகேஷ் பிராஜா இயக்கி உள்ளார். இந்த தொடர் எதிர்வரும் 19ஆம் தேதி ஓடிடியில் வெளியாகவுள்ளது.


இது தொடர்பில் அஞ்சலி கூறுகையில், இந்த தொடரில் புஷ்பா என்ற பெண்ணாக முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டரில் நடித்திருக்கின்றேன். இது மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருக்கின்றது. அப்பாவியான விலைமாதுவாக இருந்து சமூகத்தில் உள்ள ஏற்ற தாழ்வுகளை எதிர்கொள்ளும் பெண்ணின் பயணம் இது. புஷ்பா என்றால் மர்மம். இதில் பிரச்சனைகளை எப்படி சமாளித்து அவள் முன்னேறினால் என்பது தான் இந்த கதையின்  அம்சம் எனக் கூறியுள்ளார்.

Advertisement

Advertisement