• Jan 18 2025

விஜயகாந்த பிரேமலதாவை சந்தித்த பிக் பாஸ் விசித்ரா! கட்டியணைத்து ஆறுதல் தெரிவிப்பு

Aathira / 11 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் மூத்த நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் உயிரிழந்தது இன்னும் பலரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.  

மறைந்த நடிகர் விஜயகாந்தின் பிரிவை எண்ணி அவரது  குடும்பம் மட்டுமின்றி, ஒட்டுமொத்த தமிழ் நாடுமே கேப்டன் இல்லாமல் தவிக்கின்றது.


இந்த நிலையில், பிக் பாஸ் பிரபலமான விசித்ரா விஜயகாந்த பிரேமலதாவை சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார்.

அதன்படி, நடிகை விசித்ராவுடன், விஜே அம்முவும் இணைந்து சென்று தான் விஜயகாந்தின் மனைவியை பார்த்துள்ளார்கள்.


தற்போது குறித்த சம்பவம் வைரலாகி வருகின்றது. விஜயகாந்த் மறைவிற்கு பின்னர் வெளியில் வராமல் இருந்த பிரேமலதா, இளையராஜாவின் மகள் பவதாரணியின் மறைவிற்கு தான் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement