பிக்பாஸ் சீசன் 7 டைட்டில் வின்னரான அர்ச்சனா ஆரம்பத்தில் சின்னத் திரையில் சீரியல்களில் நடித்து வந்தார். அதிலும் இவர் ராஜா ராணி சீரியலில் வில்லி கேரக்டரில் நடித்திருப்பார். நெகட்டிவ் ரோலில் நடித்திருந்தாலும் அர்ச்சனாவுக்கு ரசிகர்கள் ஏராளமாக காணப்பட்டார்கள்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசனில் வைல்ட் கார்ட் என்ட்ரியாக உள்ளே நுழைந்தார். இவர் ஆரம்பத்தில் புள்ளி கேங்கால் அழுது புலம்பினாலும் அவர்களை எதிர்த்து இறுதியில் டைட்டிலும் வெற்றி பெற்றார். இவருக்கு 50 லட்சம் ரூபாய் பணப் பரிசும் கொடுக்கப்பட்டது.
d_i_a
பிக்பாஸ் வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட அர்ச்சனாவுக்கு அருள்நிதி நடிப்பில் வெளியான டிமாண்டி காலனி படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. அதில் அவருடைய தங்கச்சியாக முக்கிய ரோலில் நடித்து இருப்பார். அதில் அவருடைய நடிப்பும் பெரிதும் பேசப்பட்டது.
இந்த நிலையில், தற்போது கிராமத்து பெண்ணாக கிராமத்து கதைய அம்சம் நிறைந்த படம் ஒன்றில் நடித்து வருகின்றார் அர்ச்சனா. இது தொடர்பான புகைப்படங்களை தனது இன்ஸ்டா ஸ்டோரியில் பகிர்ந்து உள்ளார். இதை பார்த்த பலரும் அர்ச்சனாவின் வளர்ச்சிக்கு தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றார்கள்.
இதே வேளை, கடந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசனில் இடம்பெற்ற ப்ரீஸ் டாக்ஸ்கில் அருணின் காதலியாக பிக்பாஸ் வீட்டுக்குள் சென்று இருந்தார் அர்ச்சனா என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!