பிக்பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் இன்னும் மூன்று வாரங்களில் முடிவுக்கு வரவுள்ளது. இதில் முத்துக்குமரன், ஜாக்குலின் மற்றும் தீபக் ஆகிய மூன்று பேரில் ஒருவரே டைட்டில் வின் பண்ணுவார் என்ற கணிப்பு ரசிகர்களிடம் காணப்படுகின்றது.
18 போட்டியாளர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த சீசன் அதற்குப் பின்பு 6 வைல்ட் கார்ட் என்ட்ரியுடன் விறுவிறுப்பாக சென்றது. ஆனாலும் இம்முறை பங்கெடுத்த போட்டியாளர்களுள் அதிகமானோர் விஜய் டிவி பிரபலங்களாகவே காணப்பட்டார்கள்.
d_i_a
மேலும் தற்போது பைனலுக்கு செல்வதற்கான கதவுகள் திறக்கப்பட்டது போல பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு டிக்கெட் டு பினாலே டாஸ்க் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில் முத்துக்குமரனும் ஜாக்குலினும் கடுமையாக பிளான் போட்ட காட்சிகளும் இணையத்தில் வைரலாக இருந்தது.
இந்த நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து எலிமினேடாகி சென்ற தர்ஷிகா வழங்கிய பேட்டி ஒன்று வைரலாகி வருகின்றது. அதில் அவர் கூறுகையில், எனக்கும் அன்சிதாவுக்கும் பிக்பாஸ் வீட்டில் செட்டே ஆகாது. அது இருவருக்குமே தெரியும்.. ஆனால் வெளியில் வந்த பிறகு நண்பர்களாக இருப்போம் என்று பேசியிருந்தோம்.
பிக்பாஸ் வீட்டில் இருக்கிற எல்லாருக்குமே ஒரு கருத்து வேறுபாடு தோன்றுவது வழமை தான். அதிலும் அன்ஷிதா எமோஷனல் ரீதியா ரொம்பவும் கனெக்ட் ஆவாங்க...
ஆனா நிறைய டைம் அவங்க எனக்கு நல்ல பிரண்டாவும் இருந்திருக்காங்க.. உள்ளே இருந்த வரைக்கும் நான் நானாகத்தான் இருந்தேன் எதையும் மறக்க வில்லை என பேட்டியில் தெரிவித்துள்ளார்.
Listen News!