சரவணன் மீனாட்சி என்ற சீரியலில் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான நடிகை தான் ரச்சிதா மகாலட்சுமி. இவர் அதற்குப் பிறகு உப்பு கருவாடு என்ற படத்தில் மூலம் சினிமாவிலும் அறிமுகமானார். மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனது அடையாளத்தை இன்னும் பிரபலமாக்கினார்.
ரச்சிதா மகாலட்சுமி நடிப்பில் ஃபயர் திரைப்படம் எதிர்வரும் பிப்ரவரி 14-ம் தேதி வெளியாக உள்ளது. இந்தப் படத்தை ஜே. எஸ். கே சதீஷ் இயக்கியுள்ளார். இதில் பிக்பாஸ் பிரபலம் ஆன பாலாஜி முருகதாஸ் கதாநாயகனாக நடிக்கின்றார். மேலும் இவர்களுடன் சாட்சி அகர்வால், காயத்ரி போன்றவர்களும் நடித்துள்ளார்கள்.
இந்த நிலையில், பயர் படத்தில் இருந்து பாடல் ஒன்று வெளியாகி வைரலாகியுள்ளது. அதில் ரச்சிதா மகாலட்சுமி படு கிளாமராக நடித்துள்ளதோடு அதில் பாலாஜி முருகதாஸ் ரச்சிதாவை தொட்டு சீண்டிய காட்சிகள் பார்ப்போரை முகம் சுளிக்க வைத்துள்ளது. தற்போது குறித்த வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.
குறித்த பாடலில் ரச்சிதா வெறும் சட்டை மட்டுமே அணிந்துள்ளார். அவரை பாலாஜி கண்ட இடத்தில் எல்லாம் தொடுகின்றார். மேலும் இந்த பாடல் மொத்தமாகவே ஓவர் கவர்ச்சியாக காணப்படுகிறது. இதனை பார்த்து வாய் அடைத்த ரச்சிதாவின் ரசிகர்கள் நம்ம ரச்சிதாவா இப்படி மோசமாக நடித்துள்ளார் என கமெண்ட் பண்ணி வருகின்றார்கள்.
மேலும் இதுவரையில் குடும்பப் பாங்கான கதைகளில் நடித்து வந்த ரச்சிதா பயர் படத்தில் இவ்வாறு கவர்ச்சியாக நடித்துள்ளமை ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது .
Listen News!