விஜய் தொலைக்காட்சியின் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து பின்னர் தமிழ் திரையுலகில் பாடகராகவும் நடிகராகவும் திகழ்ந்தவரே சிவகார்த்திகேயன். இவர் மெரினா என்ற படத்தின் மூலம் திரைத் துறைக்குள் நுழைந்தார். இதனை அடுத்து பல வெற்றிகரமான படங்களில் நடித்து மக்கள் மனதைக் கவர்ந்தார்.
குறிப்பாக , எதிர்நீச்சல் ,ரெமோ , நம்ம வீட்டு பிள்ளை மற்றும் அமரன் போன்ற படங்கள் மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்றுக் கொண்டது. அதேவேளை அமரன் படம் சமீபத்தில் வெளியாகி இருந்ததுடன் அதிகளவான வசூலை இயக்குநர்களுக்கு பெற்றுக் கொடுத்ததும் குறிப்பிடத்தக்கது .
சிவகார்த்திகேயன் தனது 3 வது குழந்தைக்கு தனது பூர்வீக கிராமத்திற்கு சென்று காது குத்தியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர் தனது பூர்வீக கிராமமான திருவாரூர் மாவட்டதில் உள்ள திருவீழிமிழலைக்கு சென்று இந்த விழாவினை நடாத்தியுள்ளமை ரசிகர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்திருந்தது.
அங்கே தனது உறவினர்களை அழைத்து வந்து சிம்பிளாக தனது மகனின் காது குத்து விழாவை முடித்திருந்தார். குறிப்பாக , திரையுலகின் முன்னணியில் திகழ்கின்ற சிவகார்த்திகேயன் பூர்வீக மண்ணை மறக்காமல் பாரம்பரிய முறையில் விழா நடாத்தியமை அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
Listen News!