• Jan 19 2025

இன்ஸ்டாவில் தமிழ் followers -ஐ இழக்கும் சிறகடிக்க ஆசை மீனா? ஒரே ஒரு ரீல்ஸ்.. மொத்த ஆட்டமும் க்ளோஸ்

Aathira / 9 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் சீரியலில் ஒன்று தான் சிறகடிக்க ஆசை சீரியல். இதில் நாயகியாக நடிக்கும் நடிகை கோமதி பிரியாவுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உண்டு.

விஜய் டிவியின் 'வேலைக்காரன்' என்ற சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை தான் கோமதி ப்ரியா. இதில் இவரின் நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது.

மதுரையை சேர்ந்த இவர் இன்ஜினியரிங் படிப்பை முடித்துவிட்டு, கொஞ்ச நாள் வேலை செய்துள்ளார். அதன் பின் நடிப்பு மீது ஆர்வம் இருந்ததால் ஒரு ரியாலிட்டி ஷோவில் கெஸ்டாக என்ட்ரி கொடுத்துள்ளார்.

அத்துடன் இவர் தெலுங்கிலும் 'ஹிட்லர் கேரி பெல்லம்' என்ற தொடரிலும் நடித்தார். அதன்பின் வேலைக்காரன் சீரியல் முடிவடையவே, விஜய் டிவியில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட சிறகடிக்க ஆசை சீரியலில் தற்போது  நடித்து வருகிறார். 


இந்த நிலையில், சீரியல் நடிகை கோமதிப் பிரியா மலையாளத்திலும் ஒரு  தொடரில் நடித்து வருகிறார். அந்த சீரியல் குடும்பத்துடன் தற்போது ரீல்ஸ் ஒன்றை வெளியிட்டு உள்ளார்.


இதை பார்த்த ரசிகர்கள், விஜயா குடும்பத்தை விட இந்த மலையாள குடும்பம் சூப்பர் போல, எப்படி ஒற்றுமையாக இருக்காங்க என கமெண்ட் பண்ணி வந்தாலும், இன்னும் சிலர் என்ன தான் இருந்தாலும் முத்து, மீனா ஜோடி போல வருமா என பதிவிட்டு வருகிறார்கள்.

இதேவேளை, கோமதி பிரியா மலையாளத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பதாக குறித்த வீடியோவுக்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement