• May 08 2024

அடுத்தடுத்து வெளியாகும் உலக நாயகனின் மாஸ் படங்கள்! தியேட்டர் திருவிழாவுக்கு ரிலீஸான டேட்கள்..??

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

நடிகர் பிரபாஸ் நடிப்பில் கல்கி 2898 AD எனும் படம் பிரமாண்டமாக உருவாகி வருகிறது. மகா சிவராத்திரியை முன்னிட்டு கல்கி படத்தில்  பிரபாஸின் பெயரை 'பைரவா' என அண்மையில் வெளியிட்டு இருந்தார்கள்.

இந்த படத்தில், அமிர்தாபச்சன், கமல்ஹாசன் என திரையுலகில் முதிர்ச்சி பெற்ற கலைஞர்களுடன் பிரபாஸ் இணைந்து நடித்துள்ளதோடு, அவருக்கு ஜோடியாக தீபிகா படுகோன் மற்றும் திஷா பதானி என இரு ஹாலிவுட் நடிகைகள் நடித்து வருகின்றார்கள்.

மறுபக்கம் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகும் 'இந்தியன் 2' படத்தின் இரண்டாம் பாகம் ஜூன் மாதம் வெளியாகும் என இன்றைய தினம் அதிகார்வ பூர்வமாக அறிவித்துள்ளனர்.  


இந்த நிலையில், உலக நாயகனின் கல்கி 2898 AD என்ற படமும் எப்போது வெளியாகும் என தகவல் கசிந்துள்ளது.


அதாவது, கமல் நடிக்கும் 'கல்கி 2898 AD' மற்றும் 'இந்தியன் 2' ஆகிய இரு படங்களும் இரண்டு வார இடைவெளியில் வெளியாக உள்ளதாம்.

அதன்படி, 'கல்கி 2898 AD'  படம் மே 30 ம் திகதியும் 'இந்தியன் 2' படம் ஜூன் 13ம் திகதி அளவிலும் வெளியாக உள்ளதாம். இதனால் கமல் ரசிகர்களுக்கு தொடர்ச்சியாக கொண்டாட்டம் தான்.

Advertisement

Advertisement

Advertisement