• Feb 23 2025

வீட்டார் முன்னிலையில் அண்ணாமலை காலில் விழுந்த மீனா! வெளியான புதிய ப்ரோமோ

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் மக்கள் மத்தியில் பிரபலமாக காணப்படுகின்றது. அந்த வகையில் சிறகடிக்க ஆசை சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் முதல் இடத்தை பெற்று ரசிகர்களின் மனம் கவர்ந்த சீரியலாக ஒளிபரப்பாகி வருகின்றது.

இந்த நிலையில், சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்த வாரம் என்ன நடக்கும் என்பதற்கான புதிய ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என்று பார்ப்போம்.

அதன்படி சத்யா கேஸை வாபஸ் வாங்குவதற்காக விஜயா 2 லட்சம் ரூபாய் வக்கீலிடம் வாங்கியது வீட்டார்களுக்கு தெரிய வருகின்றது. இதனால் அண்ணாமலை அந்த பணத்தை கொடுக்குமாறு சொல்லுகின்றார். விஜயா மறுக்கவும் அப்படி என்றால் நான் வேலைக்கு போய் கொடுக்கின்றேன் என்று சொல்லுகிறார்.


இதனால் வேறு வழி இல்லாமல் விஜயா அந்த பணத்தை மனோஜிடம் கேட்கின்றார். மனோஜ் தன்னிடம் காசு இல்லை என்று சொல்ல, ரோகிணியிடம் மலேசியா மாமாவுக்கு போன் பண்ணி கேக்குமாறு சொல்லுகின்றார். ஆனாலும் அவர் தரமாட்டார் நான் தருகிறேன் என்று தனது தலையிலேயே தூக்கி வாரிப் போடுகின்றார் ரோகிணி.

தற்போது வெளியான ப்ரோமோவின் அடிப்படையில், மனோஜ் முத்துக்கு மூன்று லட்சம் ரூபாய் கொடுக்கிறார். அந்த நேரத்தில் விஜயாவுக்கு பார்வதி போன் பண்ணி காசு வீட்டில் தான் இருக்கின்றது என்று சொல்கின்றார். இதனால் கோபப்பட்ட முத்து மீனா மீது வீண் பழி போட்டதாக சொல்கின்றார்.

மேலும் அண்ணாமலையும் காசு தொலைந்து போகல திருட்டும்  போகல மீனாவுக்கு முன்னால நீ குற்றவாளியா நிற்கிறாய் என்று மீனாவுக்கு ஆதரவாக பேசியதோடு மீனாவுக்கு அப்பா இல்லை அந்த இடத்தில் நான் இருக்கேன் என்று சொல்ல, மீனா கண்கலங்கி அண்ணாமலையின் காலில் விழுந்து வணங்குகிறார். 

Advertisement

Advertisement