• Dec 04 2024

வசூலில் பலத்த அடிவாங்கிய கங்குவா.. 10 நாட்களில் வேட்டையாடிய மொத்த கலெக்சன்

Aathira / 1 week ago

Advertisement

Listen News!

சூர்யா நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் தான் கங்குவா. இந்த திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக திஷா பதானி நடித்திருந்தார். மேலும் இந்த படத்தில் பாபி தியோல்  வில்லனாக மிரட்டியதோடு இவர்களுடன் கருணாஸ், யோகி பாபு,  கார்த்தி உட்பட பலர் நடித்திருந்தார்கள்.

சுமார் 300 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட வரலாற்று கதை அம்சம் நிறைந்த படமாக கங்குவா திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் சூர்யா இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். மேலும் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள கங்குவா திரைப்படத்தில் முதலாவது பாகம் வெளியாகி கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. இதனால் வசூலிலும் பலத்த அடி விழுந்தது.

கங்குவா திரைப்படம் வெளியான முதல் நாளையே கடும்  விமர்சனத்திற்கு உள்ளான நிலையில் அதன் பின்பு படத்தின் இரைச்சல் சத்தம் அதிகமாக இருப்பதாக சத்தம் குறைக்கப்பட்டதோடு 12 நிமிட காட்சியும் வெட்டப்பட்டது. ஆனாலும் கங்குவா படம் தொடர்பில் நெகடிவ் கமெண்ட்ஸ் தான் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வருகிறது.


இந்த நிலையில், கங்குவா திரைப்படம் வெளியாகி 10 நாட்களை கடந்த நிலையில் மொத்த வசூல் விபரம் வெளியாகி உள்ளது. அதன்படி இந்திய அளவில் 66.10 கோடிகளை தான் திரைப்படம் வசூலித்து உள்ளதாம். மேலும் நேற்றைய விடுமுறை தினத்தில் 1. 10 கோடி தான் வசூல் செய்யப்பட்டுள்ளது. இதன்படி படத்தின் வசூலுக்கும் பட்ஜெட்டுக்கு கணக்கு பார்த்தால் வணிக ரீதியாக பெரும் தோல்வி படமாக கங்குவா காணப்படுகிறது.

அடுத்த வாரம் புஷ்பா 2 படம் ரிலீஸ் ஆக உள்ளதால் வேற வழி இல்லாமல் இந்த படத்தை திரையிட்டாக வேண்டும் என்ற நிலைக்கு திரையரங்க உரிமையாளர்கள் காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement