• Nov 29 2026

கங்குவா முதலை சீனுக்கு பின்னால் இப்படியொரு உழைப்பா? வியக்க வைக்கும் மேக்கிங் வீடியோ

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக காணப்படுபவர் தான் சூர்யா. இவர் நடிப்பில் இறுதியாக கங்குவா திரைப்படம் வெளியானது. சுமார் 300 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் மீது மிகப் பெரிய எதிர்பார்ப்பு காணப்பட்டது.

சிறுத்தை சிவா இயக்கத்தில் ஞானவேல் தயாரிப்பில் சூர்யா நடித்த திரைப்படம் தான் கங்குவா. இந்த படத்தில் அவருடன் திஷா பதாணி, பாபி தியோல் ஆகியோர் நடித்திருந்தார்கள். மேலும் இவர்களுடன் ஜோகி பாபு, ரெடிங் கிங்ஸ்லி, கருணாஸ் உட்பட பலர் நடிப்பில் இந்த படம் கடந்த நவம்பர் 14ஆம் தேதி வெளியானது.

இந்த படத்திற்காக சூர்யா கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் கடுமையாக உழைத்து உள்ளார். அதில் அவருடைய உழைப்பு பாராட்டப்பட்டது. ஆனாலும் கங்குவா படம் பற்றிய விமர்சனங்கள் படுமோசமாக முன்வைக்கப்பட்டு வருகிறது.


இந்த நிலையில், கங்குவா படத்தில் வரும் முதலை சண்டை காட்சி எப்படி எடுக்கப்பட்டது என்பது தொடர்பான மேக்கிங் வீடியோ ஒன்றை பட குழுவினர் வெளியிட்டுள்ளனர். குறித்த வீடியோ வைரலாகி வருகிறது.

Advertisement

Advertisement