• Jan 18 2025

’உயிர் தமிழுக்கு’ மாபெரும் வெற்றி.. அமீர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பது என்ன?

Sivalingam / 8 months ago

Advertisement

Listen News!

அமீர் நடித்த 'உயிர் தமிழுக்கு’ என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படம் ரசிகர்களின் மிகப்பெரிய ஆதரவை பெற்றதாகவும் ஆதரவு கொடுத்த அனைவருக்கும் நன்றி என அமீர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மரியாதைக்குரிய பத்திரிகை, தொலைக்காட்சி, மற்றும் சமூக வலைதள ஊடக நண்பர்களுக்கு வணக்கம்.

திரு. ஆதம்பாவா அவர்களின் தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் நான் முதன்மை பாத்திரமேற்று நடித்து வெளியான "உயிர் தமிழுக்கு" திரைப்படத்திற்கு நீங்கள் தந்த ஆதரவையும் என்னுடைய நடிப்பிற்கும் நீங்கள் தந்த பாராட்டுதலையும், தங்களின் மேன்மையான விமர்சனங்களையும் கண்டு மகிழ்ச்சியுற்றேன்.

மேலும் "உயிர் தமிழுக்கு" திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட திரு. பொன்வண்ணன், திரு. கரு.பழனியப்பன், திரு. SR. பிரபாகர், திரு. சிநேகன், உள்ளிட்டோருக்கும், திரைப்படம் வெளியானபோது வாழ்த்து தெரிவித்த தம்பி சசிகுமார் நண்பர் சேரன் உள்ளிட்டோருக்கும் திரைப்படத்தை பார்த்துவிட்டு உளமார பாராட்டிய அண்ணன் சீமான் அவர்களுக்கும் நண்பர் வெற்றிமாறன் அவர்களுக்கும் மற்றும் நண்பர்கள், உறவுகள், பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் என்னுடைய நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

’உயிர் தமிழுக்கு’ திரைப்படம் வெளியானதிலிருந்து ஒரு நாள் கூட ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடவில்லை என்றும் இந்த படம் வசூல் அளவில் மிகவும் மோசமான ரிசல்ட்டை பெற்றுள்ளதாகவும் திரை உலக டிராக்கர்கள் கூறிவரும் நிலையில் இந்த படம் மாபெரும் ஆதரவை பெற்றதாக அமீர் அறிக்கை வெளியிட்டிருப்பது நகைச்சுவைக்கு உரியதாக உள்ளது என நெட்டிசன்கள் இந்த அறிக்கை குறித்து கமெண்ட் பதிவு செய்து வருகின்றனர்.


Advertisement

Advertisement