தெலுங்கு சினிமாவின் பிரபல நாயகனாக அல்லு அர்ஜுன் காணப்படுகின்றார். இவரது நடிப்பில் இறுதியாக வெளியான புஷ்பா 2 திரைப்படம் விமர்சன ரீதியாக பின்வாங்கி இருந்தாலும் வசூல் ரீதியில் மிகப்பெரிய வெற்றியை கொடுத்திருந்தது.
இதைத்தொடர்ந்து தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனரான அட்லி இயக்கத்தில் நடிக்க உள்ளார் அல்லு அர்ஜுன். இந்த படத்தில் தீபிகா படுகோன், மிருணாள் தாகூர், ஜான்வி கபூர் மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகிய நடிகைகள் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.
மேலும் இந்த படத்தில் அல்லு அர்ஜுன் முதன் முறையாக நான்கு வேடங்களில் நடிக்க உள்ளாராம். அதன்படி வயதான தாத்தா மற்றும் தந்தை இரண்டு மகன்கள் என 4 கேரக்டரில் அல்லு அர்ஜுனை நடிக்க வைக்க உள்ளாராம் அட்லி. தற்போது இந்த தகவல் அல்லு அர்ஜுனின் ரசிகர்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் அல்லு அர்ஜுன் தனது குடும்பத்தினருடன் பொது வெளியில் சென்ற வீடியோ ஒன்று வைரலாகி வருகின்றது. அதில் அல்லு அர்ஜுனின் குடும்பத்தினரை சுற்றி கேமராக்கள் சூழ்ந்த நிலையில் அவர் தனது பெண் குழந்தையை பத்திரமாக அழைத்துச் சென்ற காட்சி தற்போது வைரல் ஆகி வருகின்றது.
Listen News!