• Jan 19 2025

தம்பி நடிகர் கைவிட்டதால் அஜித்திடம் சரண் அடைந்த பிரபல இயக்குனர்.. ‘தல 64’ இயக்குனர் இவர்தான்..!

Sivalingam / 7 months ago

Advertisement

Listen News!

பிரபல இயக்குனர் ஒருவர் தனது தம்பியை வைத்து படம் எடுக்க பல ஆண்டுகளாக காத்திருந்த நிலையில் அவர் கைவிட்ட நிலையில் தற்போது அஜித்திடம் சரண் அடைந்திருப்பதாகவும் அஜித்தின் 64வது படத்தை அவர்தான் இயக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் மோகன் ராஜா என்பதும் ’ஜெயம்’ ரவியின் சகோதரரான இவர் ஜெயம் ரவி நடித்த ’ஜெயம்’ ’குமரன் சன் ஆப் மகாலட்சுமி’ ’உனக்கும் எனக்கும்’ ’சந்தோஷ் சுப்பிரமணியம்’ ’தில்லாலங்கடி’ போன்ற படங்களை இயக்கியுள்ளார்.

அதன் பிறகு விஜய் நடித்த ’வேலாயுதம்’ ஜெயம் ரவி நடித்த ’தனி ஒருவன்’ சிவகார்த்திகேயன் நடித்த ’வேலைக்காரன்’ உள்ளிட்ட படங்களையும் இயக்கி உள்ளார். இந்த நிலையில் ’தனி ஒருவன்’ படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் வெளியான நிலையில் இன்னும் ஜெயம் ரவி தேதி கொடுக்கவில்லை என்றும் அவர் தனது மாமியார் தயாரிக்கும் படத்தில் தான் தொடர்ச்சியாக நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஒரு கட்டத்தில் வெறுத்துப்போன மோகன் ராஜா அஜித்துக்கு ஒரு கதை கூறியதாகவும் அந்த கதை அவருக்கு பிடித்து விட்டதை அடுத்து இந்த படத்தில் நடிக்க அஜித் பச்சைக்கொடி காட்டிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

தற்போது அஜித் ’விடாமுயற்சி’ மற்றும் ’குட் பேட் அக்லி’ ஆகிய இரண்டு படங்களில் நடித்து வரும் நிலையில் இந்த இரண்டு படங்களையும் முடித்துவிட்டு அவர் மோகன் ராஜா இயக்கத்தில் உருவாக இருக்கும் படத்தில் தான் நடிக்க போவதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

Advertisement