• Apr 01 2025

பெயருக்காகவும் பணத்திற்காகவும் அட்ஜஸ்ட்மெண்ட்... மனம் திறந்த பிரபல சீரியல் நடிகை

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

சினிமாவைப் பொறுத்தவரையில் வெள்ளித்திரை, சின்னத்திரை என்று இல்லாமல் எல்லாத் துறைகளிலும் அட்ஜஸ்ட்மென்ட் என்ற ஒன்று எழுதப்படாத விதிவிலக்காக காணப்படுகிறது.

இதற்கு பல நடிகர், நடிகைகள் பலியாகி உள்ளனர். இதுவே புதுமுக நடிகைகளாக இருந்து விட்டால் சொல்லத் தேவையில்லை. அவர்களிடம் பட வாய்ப்பு பற்றி ஆசை காட்டி, அட்ஜஸ்ட்மென்ட் டீலிங் செய்து விடுகிறார்கள். 

இதனை ஒரு சில நடிகைகள் மறுத்தாலும் இன்னும் ஒரு சிலர் சினிமா வாய்ப்புக்காக அதற்கு ஒப்புக் கொள்கிறார்கள். இவ்வாறு பல புதுமுக நடிகைகள் ஏமாந்து தங்களுடைய ஏமாற்றத்தை மிகவும் காலம் கடந்து தான் உணர்கிறார்கள்.

இந்த நிலையில், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகும் சீரியல் தான் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் கதாநாயகியாக தீபா என்ற கேரக்டரில் நடிக்கும் ஆர்த்திகா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் அட்ஜஸ்ட்மென்ட் குறித்து பேசி உள்ளார். அதன்படி அவர் கூறுகையில்,


சினிமாவில் அட்ஜஸ்ட்மென்ட் கேட்டு என்னிடம் வருபவர்களிடம், இதுபோல தெரியாம வந்து கேட்டுட்டீங்க இனி இப்படி கேட்காதீங்க என்று கொஞ்சம் வெளிப்படையாகவே சொல்லி விடுவேன்.

ஏனென்றால் சீரியல் மற்றும் சினிமா என்பது எனக்கு பெரிய விஷயம் கிடையாது. இந்த வேலை இல்லை என்றால் இன்னும் ஒரு வேலையை எடுத்துக் கொள்வேன். சினிமாவில் பெரிய ஆளாக வேண்டும் என்ற எண்ணத்திற்காக அட்ஜஸ்ட்மெண்ட் செய்து  பிரபலமாகும் வாழ்க்கை எனக்கு தேவையே இல்லை. 


எனக்கு கடவுள் கொடுத்திருக்கும் இந்த வாழ்க்கையை மிகவும் அமைதியாக சந்தோசமாக வாழ்ந்து வருகின்றேன். இந்த வாழ்க்கையில் நான் மகிழ்ச்சியாக இருந்தாலே போதும். அதற்கு பணம் தேவையில்லை பெயரும் தேவையில்லை. நாம் நாமாக இருந்தால் போதும்.

சினிமாவில் பல பெண்கள் பெயருக்காகவும் பணத்திற்காகவும் அட்ஜஸ்ட்மெண்ட் செய்கிறார்கள். ஏனைய பெண்களை பார்க்கும்போது இவர்களும்  அட்ஜஸ்ட்மென்ட் செய்வார்களோ என்ற எண்ணத்தில் எம்மிடமும் வந்து கேட்கிறார்கள். 

நாம் அவர்களை தவறாக சொல்ல முடியாது. அவர்களிடம் தெளிவாக சொல்லி விட்டாலே போதும். அதேபோல எனக்கு கவர்ச்சியாக உடை அணிவதும் பிடிக்காது. இதனால் எனக்கு பணம் குறைவாக கிடைத்தாலும் பரவாயில்லை. நான் நானாக வாழ்கிறேன் என்று கூறியுள்ளார்.

Advertisement

Advertisement