• Jan 18 2025

அஜித் பட நடிகைக்கும் ரக்ஷனுக்கும் எதுல காதல் தெரியுமா? இன்ஸ்டாவில் ஹைலைட்டான போட்டோ

Aathira / 9 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் கலக்கப் போவது யாரு என்னும் நிகழ்ச்சியின் மூலம் தொகுப்பாளராக அறிமுகமாகியவர் தான் ரக்ஷன். 

இதனைத் தொடர்ந்து பல நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி வந்த இவருக்கு குக்வித் கோமாளி நிகழ்ச்சியே சிறந்த அடையாளத்தை உருவாக்கிக் கொடுத்தது.

இது தவிர கடந்த 2019 ஆம் ஆண்டு தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்து நடிகராக அறிமுகமாகினார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வெற்றி அடைந்தது.

விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு புகழ் தீனா அவருடன்  இணைந்து "மறக்குமா நெஞ்சம்" என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார். 


தற்பொழுது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும்  "வேட்டையன்" திரைப்படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் அவர் நடித்து வருகிறார். 

இந்நிலையில், பிரபல மலையாள நடிகை மஞ்சுவாரியருடன் ரக்ஷன் இணைந்து எடுத்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகின்றது.


குறித்த புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்ட ரக்ஷன், எங்கள் இருவருக்கும் பைக்குகள் மீது அதீத காதல், அதைப்பற்றி பேசுவது என்றால் எங்களுக்கு நேரம் போவதே தெரியாது. உங்களை போன்ற சிறந்த நடிகையுடன் பணிபுரிந்ததற்கு நான் பெருமைப்படுகிறேன் என்று கூறியுள்ளார்.

மேலும், உங்களது ஆசீர்வாதம் என்றும் எனக்கு வேண்டும். உங்களுடன் இருக்கும் ஒவ்வொரு நாளிலும் ஒரு புதிய விஷயத்தை நான் கற்றுக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டு ’தலைவர் 170’ படத்தின் ஹேஷ்டேக்கையும் பதிவு செய்துள்ளார்.


Advertisement

Advertisement