• Apr 24 2026

ஜிவி பிரகாஷ் படத்திற்காக திரையரங்கை சுற்றி வரும் கள்வன் யானை! அட்டகாசமான சம்பவம்

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி தரமான பல பாடல்களை வழங்கி தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே வைத்திருப்பவர் ஜிவி பிரகாஷ்.

இவர் இசையமைப்பாளர் மட்டுமின்றி தயாரிப்பாளர் ,நடிகர் என வேறு பரிமாணங்களிலும் தனது திறமைகளை காட்டி வருகின்றார். அவ்வாறு இவர் நடித்த ரிபெல் திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி வெற்றி நடைபோடுகின்றது.

பிவி சங்கர் இயக்கத்தில் தீனா ,பாரதிராஜா ,இவானா ஆகியோருடன் ஜிவி பிரகாஷ் இணைந்து நடித்துள்ள படம் தான் 'கள்வன்' இந்த படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி வைரலானது. 


இந்த நிலையில், கள்வன் பட குழுவினர் படத்தின் ப்ரமோஷனுக்காக பல யூடியூப் தளங்களில் பேட்டி கொடுத்தது மட்டுமின்றி இது வரையில் தமிழ் சினிமாவில் எவரும் செய்யாதவாறு புதிய முறையில் விளம்பரம் செய்துள்ளனர். 


அதாவது கள்வன் திரைப்படத்தில் காட்டுயானை ஒன்றின் காட்சிகள் அதிகமாக காணப்படுகின்றது. யானையை மையமாக கொண்டே கதை நகரலாம் என்றும் எதிர் பார்க்கப்பட்ட நிலையில்,  போலியாக செய்யப்பட்ட பெரிய யானை ஒன்றில் படத்தின் போஸ்டர்களை ஒட்டி அதனை வாகனத்தில் ஏற்றிக்கொண்டு திரையரங்குகளை ஊர்வலமாய் வந்துள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.

Advertisement

Advertisement