• Jun 17 2024

கணவருடன் இருந்தது சில மாதங்கள் தான்.. எப்படி குழந்தை? சுகன்யா வதந்தியால் பரபரப்பு..!

Sivalingam / 3 weeks ago

Advertisement

Listen News!

நடிகை சுகன்யா சமீபத்தில் அளித்த பேட்டியில் தான் திருமணமாகி கணவருடன் சில மாதங்கள் மட்டுமே இருந்தேன் என்றும் ஆனாலும் எனக்கு ஒரு பெண் குழந்தை இருப்பதாக வதந்திகள் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள் என்று கூறி அதற்கு விளக்கமும் அளித்துள்ளார்.

பாரதிராஜா இயக்கிய ’புது நெல்லு புது நாத்து’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை சுகன்யா, அதன் பின்னர் ’சின்ன கவுண்டர்’ ’திருமதி பழனிச்சாமி’ ’செந்தமிழ் பாட்டு’ ’சோலையம்மா’ ’சின்ன மாப்ளே’ ’சக்கரைதேவன்’ ’தாலாட்டு’ ’கேப்டன்’ ’வண்டிச்சோலை சின்ராசு’ ’மிஸ்டர் மெட்ராஸ்’ போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

மேலும் கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவான ’இந்தியன்’ திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்த சுகன்யா அதன்பின் தொடர்ச்சியாக நடித்துக் கொண்டிருந்தார் என்பதும் கடந்த ஆண்டு வெளியான ‘தீ இவன்’ என்ற படத்தில் கூட அவர் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய படங்களிலும் இவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த 2002 ஆம் ஆண்டு ஸ்ரீதர் ராஜகோபாலன் என்பவரை நடிகை சுகன்யா திருமணம் செய்த நிலையில் ஒரு சில மாதங்களிலேயே அவர் தனது கணவரை விவாகரத்து செய்து விட்டார். இருப்பினும் அவருக்கு ஒரு பெண் குழந்தை இருப்பது போன்ற புகைப்படம் வைரல் ஆகி வரும் நிலையில் அந்த குழந்தை தன்னுடைய அக்கா குழந்தை என்றும் என்ன உண்மை என்பது கூட தெரியாமல் ஊடகங்களில் சிலர் அது என்னுடைய குழந்தை என்று பொய்யாக எழுதிக் கொண்டிருக்கின்றனர் என்றும் பல தடவை மறுப்பு கொடுத்த போதிலும் திரும்பத் திரும்ப சில மாதங்களுக்கு ஒரு முறை இந்த செய்தி வெளிவந்து கொண்டிருக்கிறது என்றும் அவர் கூறினார்.

Advertisement

Advertisement