• Jun 17 2024

அடுத்தகட்ட ஃபேஷனில் ஷோ காட்டிய உர்ஃபி ஜாவித் ..... படு வைரலாகும் வீடியோ

Aathira / 3 weeks ago

Advertisement

Listen News!

தமிழில் ஆள் பாதி ஆடை பாதி என்ற பழமொழி உள்ளது. அதில் ஒருவர் அணிந்திருக்கும் ஆடை, அவரின் தன்மை, தரம்  இயல்பு ஆகியவற்றை வெளிப்படுத்தும் என்பார்கள். அதிலும் வித்தியாசமாக உடை அணிபவர்களை பார்ப்போரும் அவர்களை கிண்டல் அடித்து கலாய்க்க தயங்க மாட்டார்கள்.

இவ்வாறு வித்தியாசமான உடைகளை அணிந்து அனைவரையும் வியக்க வைப்பவர் தான்  உர்ஃபி ஜாவித் . இவர்  தனது ட்ரெஸ்ஸிங் சென்சுக்காக பல்வேறு அவமானங்களையும் விமர்சனங்களையும் பெற்றுள்ளார். ஆனாலும் ஒவ்வொரு நாளும் வித்தியாசமான உடைகளை அணிந்து கவர்ச்சி காட்டி வருகிறார்.


இவர் ஒரு மாடலாகவும் ஹிந்தி சீரியல் நடிகையாகவும் காணப்படுகிறார். ஒரு சில படங்களிலும் நடித்துள்ளார்  உர்ஃபி ஜாவித்.  இவருக்கு சிறுவயதிலிருந்து வித்தியாசமான உடைகளை அணிவது என்றால் பிடிக்குமாம். தற்போது இவரின் வித்தியாசமான ட்ரெஸ்ஸிங் சென்ஸ்சிக்கு பின்னாடி ஒரு குழுவைவே வேலை செய்கின்றதாம்.

இந்த நிலையில்,  தற்போது வித்தியாசமான உடைகளை எல்லாம் அணிந்து முடிந்து இறுதியில் வித்தியாசமான உணவுகளையும் உடையில் அணிந்துள்ளார் உர்ஃபி ஜாவித்.. குறித்த வீடியோ பெரும் வைரல் ஆகியுள்ளது. மேலும் அதில் சைனீஸ் உணவுகளை விளம்பரப்படுத்தும் வகையில் அவர் உடைகளை அணிந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement