• Jun 17 2024

சிங்கப்பெண்ணே சீரியலுக்கு சிக்கல்.. முக்கிய கேரக்டரில் நடித்த நடிகை திடீர் விலகல்?

Aathira / 3 weeks ago

Advertisement

Listen News!

இந்திய தமிழ் தொலைக்காட்சிகளிலே சீரியல்கள் தான் போட்டி போட்டு ஒளிபரப்பாகி வருகின்றன. அதிலும் டிஆர்பி ரேட்டிங்கில்  முதல் இடத்தை பிடிப்பதற்காக போட்டி போட்டு சீரியல்களை சேனல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன.

அந்த வகையில் சன் டிவி, விஜய் டிவி தான் தற்போது டாப் டென் சீரியல்களில் போட்டி போட்டு டிஆர்பி ரேட்ங்கில் முன்னிலை வகித்து வருகின்றன. வழமையாகவே டிஆர்பி ரேட்டிங்கில் சன் டிவி சீரியல்கள் தான் முதல் ஐந்து இடங்களை பிடித்து வந்த நிலையில், தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் முதல் 5 இடத்திற்கு முன்னேறியுள்ளது.

சன் டிவி சீரியலில் சிங்கப் பெண்ணே சீரியல் தொடர்ந்தும்  முதலிடத்தில் காணப்படுகின்றது. தற்போது இந்த சீரியலுக்கும்  ஆபத்து நேர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


அதாவது கிராமத்திலிருந்து நகரத்திற்கு குடும்ப சூழ்நிலையால் வரும் ஆனந்தி சென்னையில் சந்திக்கும் பிரச்சனைகளை எடுத்துச் சொல்வது தான் இந்த சீரியலின் கதை. இதில் அன்பு, மகேஷ், நந்தா என முக்கோண காதல் கதைகளில் சிக்கிக் கொண்டுள்ளது இந்த சீரியல்.

இந்த சீரியலில் முக்கிய கேரக்டர்களில் ஆனந்தி இருக்கும் ஹாஸ்டலில் தங்கி இருக்கும் ரெஜினா, காயத்ரி மற்றும் சல்மா தான். இவர்களுக்கு என்று தனியாகவே ரசிகர் கூட்டங்கள் காணப்படுகின்றன. அதிலும் ரெஜினா கேரக்டரில் நடித்த ஜீவிதாவுக்கு மிகப்பெரிய இளைஞர் பட்டாளமே வரவேற்பு கொடுத்து வருகின்றது.

இந்த நிலையில், தற்போது சிங்கப்பெண்ணே சீரியலில் இருந்து ஜீவிதா விலகுவதாக அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அவருக்கு வேறு ஒரு சீரியலில் ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு கிடைத்ததால் இதிலிருந்து அவர் விலகுவதாக அவரே கூறியுள்ளார்.

மேலும், கால்ஷீட் பிரச்சினை காரணமாக சிங்கப்பெண்ணே மற்றும் இந்திரா ஆகிய இரண்டு சீரியகளில் இருந்தும் விலகிக் கொள்வதாக கூறியுள்ளார். 

தற்போது சிங்கப்பெண்ணே சீரியலில் அவருக்கு பதிலாக  VJ கல்யாணி நடிக்க உள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளது. இவர் எந்த அளவுக்கு ரெஜினாவின் கேரக்டருக்கு பொருந்துகிறார் என பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement

Advertisement