• Oct 18 2024

பிக் பாஸ் போட்டியாளரின் அடுத்த அப்டேட்... சீரியல் தொடரில் மீண்டும் இணையும் நடிகை... அட இவங்களா...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சின்னத்திரையில் ஹிட் சீரியல்கள் நடித்து பிரபலமானவர் தான் பாவனி ரெட்டி. இவர் தற்போது புதிய சீரியலில் கமிட்டாகி உள்ளதாக தனது சமூகவல்தளத்தில் தெரிவித்துள்ளார்.


ரெட்டைவால் குருவி, சின்னதம்பி, ராசாத்தி, தவனை முறை வாழ்க்கை என தொடர்கள் நடித்துவந்த இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டார். பிக்பாஸில் கலந்துகொண்டபோது அதில் ஒரு போட்டியாளராக இருந்த நடன கலைஞர் அமீருடன் காதல் ஏற்பட விரைவில் அவர்களும் திருமண பந்தத்தில் இணைய உள்ளார்கள்.அண்மையில் இருவரும் சேர்ந்து ஒரு சூப்பரான காரையும் வாங்கியுள்ளனர்.


பல சோகங்கள் பிரச்சினைகள் எல்லாம் தாண்டி தற்போது மிகவும் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு எந்த ஒரு தொடரிலும் கமிட்டாகாத பாவனி ரெட்டி தற்போது புதிய தொடர் ஒன்றில் கமிட்டாகி இருப்பதாக தெரிவித்துள்ளார்.


அலங்காரம் செய்து கொண்டு படப்பிடிப்பு தளத்தில் இருந்து அவர் போட்டோ வெளியிட்டுள்ளார், ஆனால் என்ன தொடர் என்பதையெல்லாம் அவர் தெரிவிக்கவில்லை.


ரசிகர்கள் அந்த புகைப்படத்தை பார்த்து பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீசனாக இருக்கும் என கமெண்ட் செய்து வருகிறார்கள். பவானியின் இந்த புதிய முயச்சிக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.


Advertisement