• Oct 18 2024

சாய் பல்லவிக்கும்- ஜெயம் ரவிக்கும் நடந்த பிரச்சினை... ஒரே நாளில் மோதும் 2 படங்கள்...

subiththira / 3 hours ago

Advertisement

Listen News!

மறைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்று படமான அமரனில் நடித்திருக்கிறார் சிவகார்த்திகேயன். ராஜ்குமார் பெரியசாமி இயக்கியிருக்கும் அமரன் படத்தில் சிவகார்த்தியேனுக்கு ஜோடியாக நடித்துள்ளார் சாய் பல்லவி நடித்துள்ளார்.


அமரன் படம் தீபாவளி பண்டிகை ஸ்பெஷலாக அக்டோபர் 31ம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. அதேநேரம் நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் பிரதர் திரைப்படம் அதே 31ம் திகதி வெளியாகிறது. 


இந்நிலையில் அமரன் பூஜையின் போது ராஜ்குமார் பெரியசாமியும், சாய் பல்லவியும் மாலையும் கழுத்துமாக இருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகி  இவர்களுக்கு திருமணமாகிவிட்டதாக பேசப்பட்டது. அதை பார்த்த சாய் பல்லவி அதிருப்தி அடைந்து வதந்தி பரப்பியவர்களை விளாசினார். 


அதே போல பிரதர் படத்தின் ஸ்டில் ஒன்றில் ஜெயம் ரவியும், ஹீரோயின் ப்ரியங்கா மோகனும் மாலையும் கழுத்துமாக இருந்தார்கள். அதை பார்த்தவர்களோ காதல் மனைவியான ஆர்த்தியை பிரிந்த ரவி தற்போது ப்ரியங்கா மோகனை திருமணம் செய்து கொண்டார் என பேசினார்கள் நெட்டிசன்கள்.


ஆனால் ஜெயம் ரவியோ, ப்ரியங்காவோ அதை கண்டுகொள்ளவில்லை. வெளியாக இருக்கும் இந்த இரண்டு திரைப்படங்களையும் ரசிகர்கள் கொண்டாட காத்திருக்கிறார்கள். 


Advertisement