• Oct 18 2024

சூப்பர் ஸ்டாரின் மெகா ஹிட் டயலாக்கை ரீகிரியேட் பண்ணிய பகத்..! டெலிடட் சீன் இதோ...

Aathira / 3 hours ago

Advertisement

Listen News!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் வேட்டையன். இந்த படம் அவரது 170 வது திரைப்படம். தற்போது வரையில் பாக்ஸ் ஆபீஸ் வசூலில் 300 கோடிகளை வேட்டையன் திரைப்படம் வசூலித்து இருப்பதாக கூறப்படுகின்றது. ஆனால் இதுவரையில் அதிகார்வபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

இதில் அமிதாப்பச்சன், பகத் பாஸில், ரித்திகாசிங், மஞ்சு வாரியர் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. ஞானவேல் இயக்கத்தில் வெளியான இந்த படம் பலரது பாராட்டையும் பெற்று வருகின்றது. நீட் தேர்வினால் உயிரிழக்கும் குழந்தைகள் மற்றும் அவர்களுடைய பெற்றோர்கள் நீட் தேர்வினால் பாதிக்கப்படுவரின் குரலை எதார்த்தமாக காட்டியுள்ளார் இயக்குனர் 

தமிழில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் பான் இந்திய படமாக வேட்டையன் திரைப்படம் வெளியானது. இதில் இடம் பெற்ற மனசிலாயோ பாடல் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று ஹிட் அடித்துள்ளது. சுமார் 900 தியேட்டர்களுக்கு மேல் இந்த படம் ரிலீஸ் செய்யப்பட்டது.


இந்த நிலையில், தற்போது வேட்டையன் படத்தில் இருந்து டெலிட் செய்யப்பட்ட காட்சி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்பு வேட்டையன் படத்தின் டெலிட் செய்யப்பட்ட சீன் ஒன்று ரிலீஸ் ஆன நிலையில் தற்போது மீண்டும் ஒரு சீன் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி அது முத்து திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேசிய இருமலு.. தும்மலு.. விக்கலு.. இதெல்லாம் கேட்டு வராது என்ற ஹிட் வசனத்தை பகத் பாஸில் ரீகிரியேட் செய்து அசத்தியுள்ளார். ஆனாலும் இந்த காட்சி படத்தில் இடம்பெறவில்லை. தற்போது நீக்கப்பட்ட காட்சியாக லைக்கா நிறுவனம் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளது.


Advertisement