• Sep 29 2024

டுவிஸ்டுக்கு மேல டுவிட்ஸ்! செமயா பண்ணிடாப்பல தம்பி சதீஸ்! 'சட்டம் என் கையில்' பட விமர்சனம்...

subiththira / 2 hours ago

Advertisement

Listen News!

காமடி நடிகரான சதீஷ் தற்போது ஹீரோவாக கலக்கி வருகிறார். நகைச்சுவை வேடங்களில் நடித்து தன்னை நன்கு நிலைநிறுத்திக்  கொண்ட இவர் தொடர்ந்து நாயகனாக நடித்து வெற்றி நாயகனாக மாறியுள்ளார்.


தற்போது ' சட்டம் என் கையில் 'திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. சினிமா பிரபலங்களிடமிருந்தும், ரசிகர்களிடமிருந்தும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. 'சட்டம் என் கையில்' படம் ஏற்காட்டில் இருக்கும் நம்ம ஹீரோ சதீஷ் வண்டியை வேகமாக ஓட்டி ஒருத்தரை ஸ்பாட் அவுட் ஆக்கிடுறாரு.


டெட் பாடியை கார் டிக்கியில் போட்டுகிட்டு  போற வழியில் சும்மா போகாம ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டரை வம்புக்கு  இழுக்குறாரு. இன்ஸ் சும்மா விடுவாரா? காரோட சதீஷை ஸ்டேஷனுக்கு அள்ளிட்டு போய் உட்கார வச்சுடுறாரு இன்ஸ். வெளியில் காருக்குள் பிணம், உள்ள சதீஷ் மாட்டிகிட்டரா இல்லையா? என்ற ரீதியில் படம் போகுது. சப் இன்ஸ்பெக்டர் சதீஷ் நல்லவன்றாரு, இன்ஸ்பெக்டர் கெட்டவன்றாரு யார் சொல்றது உண்மைன்றது கடைசியில் தெரிய வருது.


இதுக்கப்புறம் தான் கதையே. கடைசி இருபது நிமிடம் வேற லெவல் ட்விஸ்ட் இருக்கு. தமிழில் ஒரு மலையாள திரில்லர் படம் பார்த்த பீலிங்கை தருவதாக ரசிகர்கள் கூறிவருகிறார்கள். ஒரு துளி கூட காமெடி கிடையாது. ஒரு திரில்லர் கதைக்கு என்ன தேவையோ அதை சரியாக தந்திருக்காரு சதீஷ்.


சைலண்டா இருந்து செமையா பண்ணிட்டாப்பல தம்பி  சதீஷ். அஜய் ராஜ், பாவல் கீதன், பவா செல்லதுரை, மைம் கோபி என போலீஸ்காரங்க எல்லோருமே நல்லாவே பிக்ஸ் ஆயிடுறாங்க. கேமரா ஒர்க் ஒகேன்னு சொல்லலாம். படத்துல ஹீரோயின் யாருமே கிடையாது. கதைக்கு தேவை இல்லைன்னு டைரக்டர் வைக்கவில்லையாம் ஆனா பீல் குட் மூவி என்று விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளன. 

Advertisement

Advertisement