• Jan 19 2025

பிக் பாஸ் டாஸ்க்கில் வெறித்தனமாக விளையாடி தோற்ற பாய்ஸ் டீம்! வெளியான ப்ரோமோ

Aathira / 3 months ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசனில் 12வது நாள் இன்றைய தினம் ஒளிபரப்பாகி வருகின்றது. தற்போது இன்றைய நாளுக்கான முதலாவது ப்ரோமோ வெளியாகி உள்ளது.

அதன்படி இன்றைய முதல் ப்ரோமோவில் 'ஞாபகம் வருதே ஞாபகம் வருதே..' என்ற டாஸ்க் போட்டியாளர்களுக்கு வைக்கப்படுகின்றது.  அதில், ஒவ்வொரு வீட்டில் இருந்து மூன்று நபர்கள் இந்த டாஸ்க்கில்  விளையாடலாம் என கூறப்பட்டது. மொத்தமாக 15 பொருட்கள் லிஸ்டில் இருக்கும். அந்த 15 பொருட்களையும் நன்றாக ஞாபகம் வைத்து ஆக்டிவிட்டி ஏரியாவுக்கு வந்து அதே ஆர்டரில் அந்த பொருட்களை ஞாபகப்படுத்தி அடுக்கி வைக்க வேண்டும்.


இவ்வாறு வைக்கப்பட்ட டாஸ்கின் முடிவில் ஆண்கள் அணி 24 புள்ளிகளை பெற்றது. பெண்கள் அணி 25 புள்ளிகளை பெற்று வெற்றி பெற்றதாக பிக் பாஸ் அறிவித்தார். இதனால் ஆண்கள் அணி தோல்வியை தழுவிய நிலையில், பெண்கள் அணி வெற்றி பெற்ற உற்சாகத்தில் துள்ளி குதித்தனர்.

மேலும் பெண்கள் அணியினர் நாமினேட் ஆன ஒருவரை காப்பாற்ற முடியும் என்ற பிக் பாஸ் அறிவித்ததால் ஆண்கள் அணியினர் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள். எனவே இந்த முறையும்  ஆண்கள் அணி பெண்கள் அணியிடம் தோற்று விட்டனர்.

Advertisement

Advertisement