• Dec 07 2024

நீண்ட நாட்களுக்கு பிறகு அமீர் - பவானி வெளியிட்ட போட்டோஸ்! ரொம்ப மாறிட்டாங்களே..

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசனில் போட்டியாளர்களாக பங்கு பற்றியவர்கள் தான் அமீர் மற்றும் பவானி ரெட்டி. இவர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது இருவருக்கும் இடையே கெமிஸ்ட்ரி உண்டானது. பிக் பாஸ்  நிகழ்ச்சி முடிந்து வெளியே வரும்போது இருவரும் காதலர்கள் ஆகத்தான் வெளியே வந்தார்கள்.

பொதுவாக பிக் பாஸ்  வீட்டில் காதலராக இருப்பவர்கள் வெளியே வந்தவுடன் தத்தமது வேலையை பார்த்துவிட்டு சென்றுவிடுவார்கள். ஆனால் இவர்கள் அதற்கு எதிர் மாறாக தற்போது வரையில் காதலுக்கு உண்மையாக காணப்படுகின்றார்கள். இதன் காரணத்தினாலே இவர்களுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் காணப்படுகிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்து பல வருடங்கள் ஆனபோதிலும் இருவரும் ஒன்றாக சுற்றுவது, ஒன்றாக புகைப்படங்களை வெளியிடுவது என தமது வாழ்க்கையை நகர்த்தி வருகின்றார்கள். மேலும் இருவரும் மனதளவில் நெருக்கமாக இருப்பதாகவும் தங்கள் தொழிலில் ஒரு நல்ல நிலைக்கு வந்தவுடன் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் தெரிவித்து இருந்தார்கள்.


சமூக வலைத்தள பக்கங்களில் அடிக்கடி புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்ட அமீர் பவானி ஜோடி சமீப காலமாகவே இணையத்தில் தலை காட்டாமல் இருந்தது.

இந்த நிலையில் தற்போது நீண்ட நாட்களுக்கு பிறகு அமீரும் பவானியும் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டா  பக்கத்தில் வெளியிட்டுள்ளார் அமீர். தற்போது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Advertisement

Advertisement