• Dec 07 2024

அத்துமீறிய ஹீரோ! படத்தில் இருந்து விலகினார் ஸ்ருதிஹாசன்! இது தான் நடந்தது...

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடிகை ஸ்ருதிஹாசன் 'டகோய்ட் ; தி லவ் ஸ்டோரி' என்கிற தெலுங்கு படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமானார். வளர்ந்து வரும் இளம் நடிகரான ஆத்விசேஷ் இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். படத்தை சனைல் தியோ என்பவர் இயக்கி வருகிறார்.


ஹிந்தி மற்றும் தெலுங்கு என இரு மொழி படமாக இது உருவாகி வருவதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் ஸ்ருதிஹாசன் இந்த படத்தில் சில நாட்கள் படப்பிடிப்பில் கலந்து கொண்டதோடு இந்த படத்தில் இருந்து வெளியேறி விட்டார் என்றும் ஒரு தகவல் தற்போது கசிந்துள்ளது.


இந்த படம் துவங்கியபோது படத்தின் ஹீரோ ஆத்விசேஷுடன் இணைந்து ஒரு செல்பி எடுத்து சோசியல் மீடியாவில் வெளியிட்டு இனிமையான ஷூட்டிங் அனுபவம் என்று தான் ஸ்ருதிஹாசன் குறிப்பிட்டிருந்தார். ஆனால் படப்பிடிப்பில் இயக்குனர் என்று ஒருவர் இருந்தாலும் அங்கே நாளுக்கு நாள் நாயகன் ஆத்விசேஷின் ஆதிக்கம் தான் அதிகப்படியாக இருந்தது.


அதனால் தான் நடிக்க கூடிய காட்சிகளில் கூட அவர் குறுக்கீடு செய்தார் என்றும் அந்த ஆதிக்கத்தை ஏற்றுக்கொள்ள முடியாமல் தான் ஸ்ருதிஹாசன் அந்த படத்தில் இருந்து வெளியேறி விட்டார் என்றும் சொல்லப்படுகிறது.

Advertisement

Advertisement