• Nov 23 2025

நடிகர் ஷாருக்கானின் 60வது பர்த்டே.. வீட்டிற்கு முன் குவிந்த ரசிகர்கள்

Aathira / 3 weeks ago

Advertisement

Listen News!

பாலிவுட் பாட்ஷா, கிங்காங் என ரசிகர்களால்  செல்லமாக அழைக்கப்படுபவர் நடிகர் ஷாருக்கான். இவருக்கு இந்தியாவில் மட்டும் இல்லாமல் உலக அளவில் ஏராளமான ரசிகர்கள் காணப்படுகின்றனர். திவானா  படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான இவர், தனது முதல் படத்திலேயே  பிலிம் ஃபேர் விருதைப் பெற்றார். 

ஷாருக்கான் நடிப்பில் இறுதியாக பதான் படம் வெளியாகி  வசூல் ரீதியாக சாதனை படைத்தது.  அதன் பின்பு தமிழில் அட்லி இயக்கத்தில் ஜவான் படத்தில்  நடித்திருந்தார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக  நயன்தாரா  நடித்திருந்தார்.  இந்தப் படமும் ஹிந்தி சினிமாவில் அதிக வசூலை அள்ளிய படமாக சாதனை படைத்திருந்தது. 

சமீபத்தில் ஷாருக்கானுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டது. 1992 ஆம் ஆண்டு தனது பயணத்தை தொடங்கிய ஷாருக்கான் முதன்முறையாக இந்த விருதை பெற்றுள்ளார்.  அதுவும் அட்லி இயக்கத்தில்  ஷாருக்கான் நடித்த ஜவான் படத்திற்கே தேசிய விருது கிடைத்தது. 


இந்த நிலையில், நடிகர் ஷாருக்கான் இன்று தனது 60 ஆவது பிறந்த நாளை கொண்டாடுகின்றார்.  தற்போது இவருக்கு உலக அளவில்  காணப்படும் ரசிகர்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

மேலும் நேற்று இரவு ஷாருக்கான் வீட்டிற்கு முன்பு  அவருடைய ரசிகர்கள்  குவிய தொடங்கிய நிலையில், ஷாருக்கான் வெளியே வந்து தனது அன்பை வெளிப்படுத்தி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement