• Apr 01 2025

33 ஆண்டுகள் பொத்தி பொத்தி வைத்த ரகசியம்..! முதலும் முடிவுமான 'குணா' நாயகிக்கு இது தான் நடந்ததா?

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

1991 ஆம் ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் குணா. இந்த திரைப்படம் வெளியானபோது பலர் அதை பாராட்டினாலும் பெரிய வரவேற்பை பெறவில்லை என்று கூறப்படுகிறது. ஆனால் அதில் இடம்பெற்ற பாட்டுக்கு மட்டும் மவுசு அதிகமாக காணப்பட்டது.

தற்போது 33 ஆண்டுகளுக்கு பிறகு மலையாளத்தில் 'மஞ்சும்மல் பாய்ஸ்’  என்ற திரைப்படம் வெளியாகி மிகப்பெரும் வெற்றி பெற்றது. இதன் காரணமாக குணா படம் தற்போது மீண்டும் ட்ரெண்டிங்கில் வந்துள்ளது. 

இந்த நிலையில், குணா படத்தில் நடித்த நாயகி ரோஷினி அதன் பின்னர் ஏன் படத்தில் நடிக்கவில்லை? என்ன ஆனார்? எங்கே இருக்கிறார்? என்று கேள்வி எழுப்பப்பட்டது. ஆனால் அது பற்றி திரையுலகில் இருக்கும் ஒருவருக்கும் பதில் தெரியவில்லை.


இது தொடர்பில் சமீபத்தில் பேட்டி அளித்த குணா படத்தின் இயக்குனர் சந்தான பாரதி கூறுகையில், ரோஷினி நடிக்கும் போது இந்த ஒரு படத்துடன் சினிமாவில் நடிக்க மாட்டேன் என்று தான் கூறினார். 

அவர் தொடர்ந்து நடிப்பதை விரும்பவில்லை. பெரிய ஆளாக வேண்டும் என்ற எண்ணமும் அவருக்கு இல்லை. அவரது குடும்பத்தினர்கள் கூட அவர் நடிக்க வேண்டும் என்று விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளார்.

இவ்வாறு 33 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது சந்தான பாரதி மூலம் தான் குணா படத்திற்கு பிறகு நடிகை ரோஷினி ஏன்  நடிக்கவில்லை என்ற ரகசியம் தெரிய வந்துள்ளது.

Advertisement

Advertisement