தென்னிந்திய பிரபல நடிகரான ராம்சரண் நடிப்பில், புகழ் பெற்ற இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் தான் RC16.
மைத்திரி மூவி மேக்ஸ் என்ற முன்னணி தயாரிப்பு நிறுவனம் பெருமையுடன் வழங்கும் இந்த திரைப்படத்தில், வெங்கட சதீஸ் கிலாறு தயாரிப்பாளராக களமிறங்குகிறார்.
இந்த நிலையில், இந்த திரைப்படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஜான்விக் கபூர் நடிக்க உள்ளார் என உறுதியான தகவல் வெளியாகி உள்ளது.

தென்னிந்திய திரையுலகில் நடிகையாக அறிமுகமான ஜான்வி கபூர், ஜூனியர் NTR-க்கு ஜோடியாக நடித்துள்ள நிலையில், தற்போது ராம்சரனுக்கும் ஜோடியாக நடிக்கவுள்ளார்.
இவ்வாறு இவர்கள் கூட்டணியில் உருவாகும் படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைக்க உள்ளார். இது உலகளாவிய ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதே வேளை ட்ரிபிள் ஆர் படத்தின் நாயகர்களை டார்கெட் செய்து ஜான்வி கபூர் நடித்து வருவதாக தங்களின் கமெண்ட்களை பதிவு செய்து வருகிறார்கள் ரசிகர்கள்.
                             
                            
                            
                            
                                                    
                                                    
                                            
                                            
                                            
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                
                
                
                
                
Listen News!