ஆந்திர மாநிலம் அனந்தபுரம் நகரில் உள்ள ஒரு திரையரங்கில் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம் நடைபெற்றுள்ளது. ‘புஷ்பா-2’ படத்தை பார்த்துக் கொண்டிருந்த 40 வயது நபர், திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தை கண்டதற்குப் பிறகும் திரையரங்கு ஊழியர்கள் படம் திரையிடலை நிறுத்தாததால், அங்கிருந்த பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவம் அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
சம்பவத்துக்கான தகவலினை அறிந்த போலீசார் உடனடியாக திரையரங்கிற்கு விரைந்து வந்தனர். அவர்கள் திரையிடலை தடுத்து நிறுத்தி, சம்பவத்திற்கான வழக்கை பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.
உயிரிழந்த நபரின் உடல் மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பப்பட்டு, அவரின் மரணத்திற்கு காரணமான உடல்நலக் கோளாறுகளை விசாரணை முடிவுகளின் அடிப்படையில் உறுதிப்படுத்த உள்ளனர்.இந்த சம்பவம் திரையரங்குகளில் மக்கள் பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான நடவடிக்கைகள் குறித்து கேள்விகளை எழுப்பி உள்ளது.
Listen News!