• Jan 19 2025

ரவி-ஸ்ருத்திகிடையே ஏற்படும் சண்டை... வீட்டை விட்டு செல்லும் ஸ்ருத்தி...

subiththira / 3 months ago

Advertisement

Listen News!

போலீஸ் ஸ்டேஷனில் இருந்து முத்துவை அழைத்து வர மீனா சென்று விடுகிறார். விஜய்யா வீட்டு வேலைகளை எல்லாம் செய்கிறார். வீட்டுக்கு வந்த மீனா நான் செய்றேன் தாங்க என்று வேலைகளை செய்கிரார். வளமை போல முத்துவை திட்டிக்கொண்டு இருக்கிறார்.


அங்கு வந்த ரோகிணி மனோஜ் இன்னும் காப்பி வரவில்லை என்று சொல்கிறார். மீனா கோலம் போட்டு விட்டு காப்பி தருவதாக சொல்கிறார். முத்து ரோகிணியை கோலம் போடுமாறு சொல்கிறார். மீண்டும் விஜய்யா திட்ட ஆரம்பித்து விடுகிறார். மீனா முத்துவை ஆரத்தி எடுத்து வரவேற்கிறார். பின்னர் அண்ணாமலையிடம் நடந்த விடையத்தை கூறுகிறார். 


ஸ்ருத்தி  தனக்கு காய்ச்சல் இன்றைக்கு நான் லீவ் நீயும் லீவு போடு என்று சொல்கிறார். இல்ல இன்றைக்கு முக்கியமான ஓடர் இருக்கு நான் போயிட்டு சீக்கிரம் வாரன் என்று சொல்கிறார். மீண்டம் ஸ்ருத்தி நான் வந்துவிடுகிறேன் மீனா அண்ணிகிட்ட சொல்லிட்டு போறேன் என்று சொல்லிவிட்டு செல்கிறார் ரவி.


இதனால் ஸ்ருத்தி சண்டை போடுகிறார். ரவி சென்ற பிறகு பெட்டி எடுத்துக்கொண்டு வீட்டுக்கு கிளம்புகிறார். அப்போது வந்த மீனா எங்க போறீங்க ஸ்ருத்தி என்று கேட்ட நான் அம்மா வீட்டுக்குப்போறேன் போறேன் என்று நடந்த விடையத்தை கூறுகிறார். விஜயா தடுத்து பிடிவாதமாக போய்விடுகிறார். 


வேலைக்கு சென்ற ரவி ஸ்ருத்தி நினைப்பாகவே இருக்கிறார். நீத்து,ஸ்ருத்திக்கு கால் பண்ணி பேசுங்க என்று சொல்கிறார். அப்போது ரவிக்கு விஜயா கால் பண்ணி ஸ்ருத்தி வீட்டை விட்டு போய்ட்டாங்க என்பதை கூறுகிறார். அவங்களா வந்த வரட்டும் இல்லன்னா விடு என்று ரவிக்கு சொல்கிறார். இதனை பார்த்த முத்து மீனா திகைத்து நிற்கின்றனர்.  


Advertisement

Advertisement