• Jan 18 2025

மாமனார் பிறந்தநாளுக்கு ஐஸ்வர்யா செய்த செயல்... வைரலாகும் புகைப்படம்...

subiththira / 3 months ago

Advertisement

Listen News!

பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் மூலம் மீனும் ரீஎன்ட்ரி கொடுத்து ரசிகர்களை மிரளவைத்துள்ளார்.  அவரது கணவர் அபிஷேக்கை விவாகரத்து செய்யப்போவதாக தொடர்ந்து தகவல்கள் வந்துகொண்டிருக்கிறது. இருப்பினும் அவர் சமீபத்தில் திருமண மோதிரத்தை காட்டி வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்து இருந்தார்.


ஐஸ்வர்யா ராய் மற்றும் அமிதாப் பச்சன் வீட்டில் மாமியார் - மருமகள் சண்டை நடக்கிறது, அதனால் ஐஸ்வர்யா தனியாக வசித்து வருகிறார் என்றும் ஒரு செய்தி வந்தது. மேலும் நிகழ்ச்சிகளுக்கு வந்தால் கூட அமிதாப் குடும்பத்துடன் ஐஸ்வர்யா வரமாட்டார்.  இந்நிலையில் அமிதாப் பச்சன் 82வது பிறந்தநாளான நேற்று ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்தனர்.


ஐஸ்வர்யா ராய் எந்த பதிவும் போடாமல் இருந்த நிலையில் நாள் முடியும் நேரத்தில் இரவு 12 மணி அளவில் ஒரு பதிவை இன்ஸ்டாவில் போட்டிருக்கிறார். பேத்தி ஆரத்யா உடன் அமிதாப் பச்சன் இருக்கும் போட்டோவை பதிவிட்டு அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி இருக்கிறார். அதை நாள் முடிய சில நிமிடங்கள் இருக்கும்போது அவர் பதிவிட்டு இருக்கிறார்.

Advertisement

Advertisement