• Nov 23 2025

29 அறுவை சிகிச்சை, இந்தியால கார் ஓட்ட முடியல, குடும்பத்தோட வெளியே செல்ல முடியல..! அஜித்

Aathira / 3 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழும்  அஜித், சினிமாவில் மட்டுமல்ல  பைக், கார் ரேஸ்சிலும் அதிக கவனம் செலுத்தி வருகின்றார்.  இவர் தற்போது தன்னுடைய சினிமா வாழ்க்கை, கரூர் சம்பவம், குடும்பம், அடுத்த படம் பற்றி பல விஷயங்களை மனம் திறந்து பேசி உள்ளார். தற்போது இவர் வழங்கிய பேட்டி இணையத்தில் வைரலாகி உள்ளது. 

அதன்படி கரூர் சம்பவத்தில்  41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அதற்கு ஒருவரை மட்டும் குற்றம் சாட்ட முடியாது. இதற்கு அனைவரும் தான் பொறுப்பு.  கிரிக்கெட் விளையாட்டிலும் அதிக கூட்டம் கூடுகின்றது. ஆனால் இவ்வாறான உயிரிழப்புக்கள் ஏற்பட்டது இல்லை.  திரைத் துறையில் தான் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுகின்றன. அவற்றை நிறுத்த வேண்டும் என்றார்.

இந்த நிலையில், அஜித்குமார் ரேஸிங்கில் ஈடுபட்டபோது பலமுறை விபத்தில் சிக்கியதாகவும் கூறியுள்ளார். அதன்படி அவர் கூறுகையில்,  நான் பலமுறை ரேசிங்கின் போது விபத்தில் சிக்கி இருக்கின்றேன். இது எனது குடும்பத்துக்கு மன அழுத்தத்தை கொடுக்கும். ஆனால்  ரேசிங்கில் ஈடுபடும் பலருக்கும் இது போல விபத்து நடக்கும். நான் நடிகர் என்பதால் இது பெரிய செய்தியாக வருகின்றது.  ஆனாலும் இதுவரையில் பெரிய காயமோ, போட்டியை தவிர்க்கும் அளவிற்கு  எந்த நிலையோ ஏற்பட்டது இல்லை. 


இதுவரைக்கும் எனக்கு 29 அறுவை சிகிச்சைகள் இடம் பெற்றுள்ளன.  திரைப்படத்திலும், பந்தயத்திலும் ஒரே நெறித்தான். அது சரியாக குழுவை அமைக்க வேண்டும்.  புகழ் என்பது இரண்டு பக்கமும் கூர்மையான வாள் போன்றது.  வசதி நல்ல வாழ்க்கையை வாரி வழங்கும். அதே நேரத்தில் முக்கியமான விஷயங்களை அது பறித்து விடும். 

ரசிகர்கள்  என் மீது கொண்ட அன்புக்கு நான் நன்றி கடன் பட்டுள்ளேன்.  ஆனால் அதே அன்பினால் குடும்பத்துடன் நான் வெளியே செல்ல முடியவில்லை.  என்னுடைய மகனை பள்ளிக்கு அழைத்துச் செல்ல முடியவில்லை.  இந்தியாவில் நான் கார் ஓட்ட முடியாது.  காரணம் என்னை பார்த்தால்  பலர் என்னை புகைப்படம் எடுக்க பின் தொடர்வார்கள்.  இதனால் சாலையில் பலருக்கும் ஆபத்து என்றார்.

Advertisement

Advertisement