• Nov 23 2025

ஆத்தி! செம்ம Fire ah பேசிய சாண்ட்ரா, திவ்யா கணேஷ்.! வைல்ட் கார்ட் என்ட்ரியின் சம்பவம்

Aathira / 3 weeks ago

Advertisement

Listen News!

கடந்த அக்டோபர் ஐந்தாம் தேதி ஆரம்பிக்கப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சி 9ஆவது சீசன் தற்போது   நான்காவது வாரத்தை எட்டியுள்ளது.  இந்த சீசனில் இறுதியாக நேற்றைய தினம் கலையரசன் எலிமினேட் ஆகி வெளியேறினார்.  அதன்பின்பு  புதிதாக நான்கு வைல்ட் கார்ட் என்ட்ரி  உள்ளே சென்றுள்ளனர்.

இந்த நிலையில், தற்போது வெளியான ப்ரோமோவில்  விஜய் டிவி பிரபலங்களான  திவ்யா கணேஷ்,  அமித் பார்கவ் மற்றும்  பிக் பாஸ் வரலாற்றில் முதல் முறையாக கணவன் மனைவியாக பிரஜின் பத்மநாபன் - சாண்ட்ரா ஏமி  ஜோடியும் உள்ளே  சென்றுள்ளனர். 

அதில் முதலாவதாக என்ட்ரி கொடுத்த சாண்ட்ரா ஏமி,  உள்ள ஒரு குரூப் இருக்கு அந்த குரூப் உடைச்சிட்டேன்டா  போதும் என்று சொல்கின்றார்.   மேலும் திவ்யா கணேஷ்  சில பேருக்கு கிளாஸ் எடுக்க வேண்டி இருக்கு என்று சொல்லுகின்றார். 


அதன்பின் பிரஜின் பத்மநாபன்,   உள்ள போய் கால வெச்ச உடன் தரதரன்னு கிழிக்க போறேன்  என்று சொல்லுகிறார்.  இறுதியாக அமித் பார்கவ்,  நான் வாய்ஸை விடமாட்டேன்  செஞ்சி காட்டுவேன் என்று அதிரடியாக உள்ளே செல்லுகின்றனர். 

எனவே  பிக் பாஸில்  ஆரம்பத்தில் 20 போட்டியாளர்கள் பங்கு பற்றிய நிலையில் அதிலிருந்து நந்தினி, பிரவீன் காந்தி, அரோரா, ஆதிரை மற்றும் கலையரசன் ஆகியோர் வெளியேறினர். தற்போது அவர்களுக்கு பதிலாக நான்கு பேர் உள்ளே என்ட்ரி கொடுத்துள்ளனர். இவர்களால் ஆட்டம் சூடு பிடிக்குமா? இல்லையா?  என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். 




 

Advertisement

Advertisement