தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகள் பற்றி பல தகவல்கள் நாளாந்தம் வெளியான வாரே உள்ளன. அந்த வகையில் நடிகை சமந்தாவும் தற்போது ட்ரெண்டிங்கில் காணப்படுகின்றார். இவர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்த பிறகு பலராலும் கவனிக்கப்படுகின்ற நடிகையாக வலம் வருகின்றார்.
அதேபோல தான் ஒர்க்அவுட் செய்யும் வீடியோக்கள், புகைப்படங்கள், கிளாமர் உடையில் எடுத்த புகைப்படங்களையும் சமூக வலைதள பக்கங்களில் அடிக்கடி பதிவிட்டு வருகின்றார்.
சமந்தாவுக்கு உடல்நல பிரச்சனை இருந்தாலும் அதோடு போராடி மீண்டு வந்து தனது சினிமா கேரியரில் கவனம் செலுத்தி வருகின்றார். அது மட்டும் இல்லாமல் இவர் பிரபல இயக்குனர் ஒருவரை டேட்டிங் செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
மேலும் நேற்றைய தினம் சமந்தா வெளியிட்ட புகைப்படத்தில் ஆண் ஒருவரின் கை காணப்பட்டதோடு, அவருடன் சமந்தா ஜூஸ் குடிப்பதாகவும் காணப்பட்டது. ஆனாலும் அது யார் என்ற சீக்ரெட் தெரியவில்லை. இறுதியில் அவர் வெளியிட்ட ஹார்ட் சிம்போல் போட்டோவும் ரசிகர்களுக்கு சந்தேகத்தை கிளப்பியது.
இந்த நிலையில், நடிகை சமந்தா தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதில் மிகவும் மெலிந்த தோற்றத்தில் சமந்தா காணப்படுகின்றார். தற்போது குறித்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றது.
Listen News!