பிரபல நடிகர் ஆர்யா திருமணத்தின் பின்னர் படங்களில் நடிப்பதை குறைத்து கொண்டுள்ளார். இவரின் காமெடியான நடிப்பிற்கு ஒரு தொகை ரசிகர் கூட்டம் உள்ளது. தற்போது தினேஷ் உடன் இணைந்து ஒரு படம் மற்றது சர்பட்டை 2 படங்களில் நடித்து வருகின்றார்.
இவ் இரண்டு படங்களும் முடிந்த பின்னர் ஆர்யா வேல்ஸ் தயாரிப்பில் யூட் ஆண்டனி ஜோசப் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வந்துள்ளது. ஆனால் குறித்த இயக்குநர் மலையாளத்தில் ஒரு படத்தினை இயக்கி வருவதானல் அது முடிந்த பின்னர் ஆர்யா படத்தினை ஆறு மாதங்களின் பின்னர் ஆரம்பிக்கவுள்ளதாக தெரியவந்துள்ளது.
என்றாலும் இந்த படம் 6 மாதங்களுக்குப் பிறகு ஆரம்பிக்கப்படும் எனவும் அதன் இயக்குநர் யூத் ஆண்டனி ஜோசப் அதற்கான திட்டத்தை சில மாதங்களுக்குப் பிறகு செயல்படுத்துவார் என கூறப்பட்டுள்ளது. மற்றும் ஆர்யாவும் இதற்கு உடன்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Listen News!