• Aug 03 2025

கரீனா கபூர் வந்த பிறகுதான் யோகா வந்தது கிடையாது...!சர்வதேச யோகா தினம் நிகழ்வில் நமீதா..!

Roshika / 1 month ago

Advertisement

Listen News!

இந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நமீதா . இவருக்கு என்று தனி ரசிகர்கள் காணப்படுகின்றார்கள். இந்நிலையில், தமிழகத்தில் நடிகையும், பாஜக நிர்வாகியுமான நமீதா  செயற்பட்டு வருகின்றார். இன்று இவர் யோகா பற்றி கூறிய விடயம் ரசிகர்கள் மத்தியல் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. 


இவர் ஆரம்பகாலத்தில் தமிழ் இந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வந்தவர். இவர் மேலும் திருமணத்தின் பின்பு நடிப்பதை நிறுத்தி விட்டார். அரசியல் கட்சி  ஒன்றில் தற்போது நிர்வகித்து வருகின்றார். பல சிக்கல்கள் ,சர்ச்சைகள் என பலவற்றில் சிக்கி இருந்தாலும் அதை தாண்டி கட்சி  ஒன்றினை செயற்படுத்தி வருகின்றார் . இந்த நிலையில் யோகா நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு பேசிய விடயம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை உள்ளது.  


அதாவது அவர் கூறுகையில் கரீனா கபூர் வந்த பிறகுதான் யோகா வந்தது கிடையாது பல ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்பு தோன்றியதாகவும்தமது கலாச்சாரத்திற்கு  முக்கியத்துவம் கொடுக்கபட வேண்டும்  அதன் பிறகுதான் ஏனைய கலாசாரம் என்று கூறியிருந்தார் . மேலும் கூறும் போது என் குழந்தைகளுக்கு ஸ்பைடர் மேன், சூப்பர் மேன் தெரியாது "ஜெய் ஹனுமான்" தான் தெரியும் எனக்கூறிய விடயம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. 




Advertisement

Advertisement