• Dec 19 2025

யாஷின் ‘Toxic’ படம் ரத்தாகவில்லை.. வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த படக்குழு.!

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமா ரசிகர்கள் நீண்ட நாட்களாக ஆவலுடன் எதிர்பார்த்து வரும் படம் “Toxic”. கேஜிஎஃப் (KGF) படத்தின் மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு, ரோக்கிங் ஸ்டார் யாஷ் மீண்டும் திரைக்கு வரவிருக்கும் இந்த படம் குறித்து சமீபத்தில் பல்வேறு வதந்திகள் இணையத்தில் பரவி வந்தன. குறிப்பாக, இந்த படம் 2026 மார்ச் மாதத்தில் வெளியாகாது, படப்பிடிப்பு தாமதமாகி விட்டதாக சில தகவல்கள் வெளியானது.


ஆனால், தற்போது “Toxic” படக்குழுவே நேரடியாக அறிவிப்பு வெளியிட்டு, இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

படக்குழு வெளியிட்ட அதிகாரபூர்வ அறிவிப்பில், “ரோக்கிங் ஸ்டார் யாஷ் நடித்திருக்கும் Toxic திரைப்படம், தமிழ், ஹிந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய நான்கு மொழிகளில் மார்ச் 19, 2026 அன்று உலகளவில் வெளியாகும்” என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்மூலம், ரசிகர்களிடையே பரவியிருந்த தாமதம் மற்றும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வெளியாகியவுடன் சமூக வலைத்தளங்களில் #ToxicOnMarch19 என்ற ஹாஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.

Advertisement

Advertisement